2020ல் விபத்துகள் குறைந்ததால் மோட்டார் காப்புறுதி நிறுவனங்களுக்கு லாபம் கூடியது

2020ல் விபத்துகள் குறைந்ததால் மோட்டார் காப்புறுதி நிறுவனங்களுக்கு லாபம் கூடியது

1 mins read

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு ஏப்­ரல், மே மாதங்­களில் கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­தால் சாலை­களில் வாகன விபத்­து­கள் குறைந்­தன. இத­னால் மோட்­டார் காப்­பு­றுதி நிறு­வ­னங்­க­ளுக்கு லாபம் கூடி­ய­தாக சிங்­கப்­பூர் பொது காப்­பு­று­திச் சங்கம் நேற்று தெரி­வித்­தது.

மோட்­டார் வாகன காப்­பு­று­திப் பிரி­வில் கடந்த ஆண்டு மொத்த சந்­தாத் தொகை 0.7 விழுக்­காடு உயர்ந்து $1.13 பில்­லி­ய­னாக பதி­வா­னது. அப்­பி­ரி­வில் லாபம் $104.5 மில்­லி­ய­னாக இருந்­தது.

ஒப்­பு­நோக்க, 2019ல் மொத்த சந்­தாத் தொகை $1.12 பில்­லி­ய­னா­க­வும் லாபம் $17.4 மில்­லி­ய­னாகவும் இருந்­தது.

எனி­னும், பொரு­ளி­யல் நட­வடிக்­கை­கள் தொடங்­கி­யுள்­ள­தால் வாகன விபத்துகளின் எண்­ணிக்கை கூடி­ வருவதாக சங்கம் எச்சரித்துள்ளது.