கருத்தரங்கில் பிரமுகர்கள்: கொவிட்-19 சூழ்நிலையிலும் சிங்கப்பூர்-ஜப்பான் உறவை மேலும் வலுவாக்க இயலும்

கருத்தரங்கில் பிரமுகர்கள்: கொவிட்-19 சூழ்நிலையிலும் சிங்கப்பூர்-ஜப்பான் உறவை மேலும் வலுவாக்க இயலும்

2 mins read
79d2fc52-8237-443b-b06a-f1614ac3df34
ஜப்பான் மக்களின் மீள்திறன், குடிமை உணர்வு ஆகியவற்றில் இருந்து சிங்கப்பூர் பலவற்றையும் கற்றுக்கொள்ள முடியும் என்று வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். படம்: ஏஎஃப்பி -

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் அதி­கார போட்­டா­போட்டி கூடி உள்­ளது. உல­க­மய ஏற்­பாட்­டிற்கு எதிர்ப்­பு­கள் அதி­க­மாகி வரு­கின்­றன. கொவிட்-19 கார­ண­மாக எல்­லை­கள் மூடி­க்கி­டப்­ப­தால் நாடுகள் துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில் இருக்­கின்­றன.

இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யி­லும் சிங்­கப்­பூ­ருக்­கும் ஜப்­பா­னுக்­கும் இடை­யில் உற­வு­கள் மேலும் வலு­வடைய பல வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன என்று 14வது ஜப்­பான்-சிங்­கப்­பூர் கருத்­த­ரங்­கில் உரை­யாற்­றிய பிரமுகர்கள் குறிப்­பிட்­ட­னர்.

மின்­னி­லக்­க­ம­யம், பசு­மைப் பொரு­ளி­யல், தடுப்­பூசி விநி­யோ­கம் ஆகி­ய­வற்­றி­லும் தாராள வர்த்­த­கம், கடல்­வழி சுதந்­தி­ரம், சட்ட ஆட்சி முறை போன்ற பொது­வான நியதி­களி­லும் அதிக ஒத்­து­ழைப்­புக்கு இடம் இருப்­ப­தாக அவர்­கள் நம்­பிக்­கை தெரி­வித்­த­னர்.

வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட், ஜப்­பா­னின் வெளி­யு­றவு துணை அமைச்­சர் ஈச்­சிரோ வாஷியோ, பொதுத் தூதர் டோமி கோ, ஜப்­பா­னின் வாசெடா பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர் யுகிக்கோ ஃபுகாகவா ஆகி­யோர் அந்த மெய்­நி­கர் கருத்­தரங்­கில் உரை­யாற்­றி­ய­வர்­களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

சிங்­கப்­பூ­ரும் ஜப்­பா­னும் கொவிட்-19லிருந்து மீண்டு வர பாடு­ப­டு­கின்­றன. இந்த நிலை­யில், ஜப்­பா­னு­டன் சிங்­கப்­பூர் தொடர்ந்து அணுக்­க­மாக ஒத்­து­ழைக்­கும் என்று அமைச்­சர் சீ ஹொங் டாட் தெரி­வித்­தார்.

மக்­க­ளின் மீள்­தி­றன், குடிமை உணர்வு ஆகி­யவை தொடர்­பில் ஜப்­பா­னி­டம் இருந்து சிங்­கப்­பூர் கற்­றுக்­கொள்ள முடி­யும் என்­றும் அவர் கூறி­னார்.

கருத்­த­ரங்­கில் உரை­யாற்­றிய ஜப்­பா­னிய அமைச்­சர், சுதந்­தி­ர­மான, திறந்த இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்தை உரு­வாக்­கு­வது தொடர்­பில் ஜப்­பான் செயல்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்பிட்டார்.

அந்­தக் கருத்­த­ரங்­குக்கு சிங்­கப்­பூர் அனைத்­து­லக விவ­கா­ரப் பயி­ல­க­மும் ஜப்­பான் அனைத்­து­லக விவ­கா­ரப் பயி­ல­க­மும் ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.