எம்இஎஸ் மீது 553 குற்றச்சாட்டுகள்

எம்இஎஸ் மீது 553 குற்றச்சாட்டுகள்

2 mins read

சிங்­கப்­பூ­ரின் பிர­பல நிறு­வ­னங்­களில் ஒன்­றான எம்­இ­எஸ் குழு­மத்­தின் மீது 553 குற்­றச்­சாட்­டு­கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

'ஒர்க் பாஸ்' விண்­ணப்­பங்­களில் பொய்­யான சம்­ப­ளம் மற்­றும் தவ­றான விவ­ரங்­களை தெரி­வித்­தது தொடர்­பில் அந்­தக் குழு­மத்­தின் மூன்று நிறு­வ­னங்­கள் மற்­றும் ஐந்து இயக்­கு­நர்­கள் மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

வெளி­நாட்­ட­வர்­களை உரிய வேலை அனு­ம­திச் சீட்டு இல்­லாமல் வேலைக்கு அமர்த்­தி­யது, ஊழி­யர்­களை அதிகப்படியாக மிகுதி நேர வேலை­யில் ஈடு­ப­டுத்­தி­யது போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர்­கள் எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

எம்­இ­எஸ் குழு­மத்­தைச் சேர்ந்த மினி என்­வை­ரன்­மண்ட் சர்­வீ­சஸ், லேபர்­டெல் மேனஜ்­மண்ட் கார்ப்­ப­ரே­ஷன், எம்­இ­எஸ் லாஜிஸ்­டிக்ஸ் ஆகி­யவை அந்த மூன்று நிறு­ வனங்­க­ளா­கும்.

திரு சிவ் சாய்ன் லூன், 56, ஃபாத்தி­முன்­னிசா முக­மட் அப்­துல் ஜலீல், 37, ஹாஜா நவாஸ், 52, பர்விஸ் அஹ­மட் முக­மட் கவுஸ், 44, முக­மட் ஜின்னா முக­மட் அப்­துல் ஜலீல், 38 ஆகி­யோர் ஐந்து இயக்­கு­நர்­கள் ஆவர். ஐவ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர் வேலை நிய­ம­னச் சட்­டம் மற்­றும் வேலை நிய­ம­னச் சட்­டத்­தின்கீழ் ஒட்­டு­மொத்­த­மாக மூன்று நிறு­வ­னங்­களும் ஐந்து இயக்­கு­நர்­களும் 553 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு ­வ­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

எம்­இ­எஸ் குழு­மத்­தின் நிறு­வ­னங்­களில் சட்­ட­வி­ரோத செயல்­கள் நடப்­ப­தாக 2019ல் தக­வல் கிடைத்­த­தை­ய­டுத்து விரி­வான விசா­ர­ணை­யில் இறங்­கி­ய­தாக அமைச்சு குறிப்­பிட்­டது. அந்த விசா­ர­ணை­யில் 2009 முதல் 2019 மே மாதம் வரை­ லேபர்­டெல் மற்­றும் எம்­இ­எஸ் லாஜிஸ்­டிக்ஸ் ஆகிய இரண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு உரிய வேலை அனு­ம­திச் சீட்டு இல்­லாமல் ஊழி­யர்­களை மினி என்­வை­ரன்­மண்ட் சர்­வீ­சஸ் அனுப்பி வைத்த விவ­ரம் தெரிய வந்­தது.

அவர்­க­ளு­டைய வேலை அனு­ ம­திச் சீட்டு விண்­ணப்­பங்­களில் தவ­றான சம்­ப­ளம், வேலை விவ­ரம் தெரி­விக்­கப்­பட்டதாகக் கூறப்படு கிறது. இதற்கு மூன்று நிறு­வ­னங்­களும் இயக்­கு­நர்­களும் உடந்­தை­யாக இருந்­த­தாக குற்­றச்­சாட்­டு­கள் தெரி­விக்­கின்­றன.

2019 மார்ச் முதல் மே வரை­யில் மினி என்­வை­ரன்­மண்ட் சர்­வீ­சஸ் தனது ஊழி­யர்­களை அனு­ம­திக்­கப்­பட்ட மிகை­நே­ரத்­துக்கு மேல் அதிகப்படியாக வேலை செய்ய வைத்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இவ்­வே­ளை­யில் சட்­ட­வி­ரோத செயல்­களைப் பற்றி தெரி­வித்த ஊழி­யரை மனி­த­வள அமைச்­சின் வெளி­நாட்டு ஊழி­யர் நிர்­வா­கப் பிரி­வின் இயக்­கு­நர் கெவின் டியோ பாராட்­டி­யுள்ளார்.

"ஊழி­யர் வேலை நிய­ம­னம் தொடர்­பான இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­களை அமைச்சு கடு­மை­ யா­கக் கரு­து­கிறது. அம­லாக்க நட­வ­டிக்­கை­க­ளி­லும் கண்­கா­ணிப்­பி­லும் தொடர்ந்து விழிப்­பு­டன் அமைச்சு செயல்­ப­டும். குற்­றச் செயல்­களில் ஈடு­படும் தரப்­பி­னர் மீது வலு­வான அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்," என்று திரு டியோ அறிக்ை­க­யில் வலி யுறுத்தியிருந்தார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை சட்­ட­வி­ரோ­த­மாக வேலைக்கு அமர்த்­தி­னால் அப­ரா­தமோ அல்­லது சிறைத் தண்­ட­னையோ விதிக்­கப்­ப­ட­லாம். வேலை அனு­மதி விண்­ணப்­பப் படி­வங்­களில் தவ­றான தக­வல் அளித்தால் 20,000 வெள்ளி வரை அப­ரா­தம் அல்­லது சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.