'சாங்கி கடலில் சிறுவன் மூழ்கிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது'

'சாங்கி கடலில் சிறுவன் மூழ்கிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது'

2 mins read
6a8caaa7-1801-41fa-adfc-c65ac3fbce31
சாங்கி கடற்கரைக்கு விளையாடச் சென்ற சிறுவர்களில் இரண்டு பேர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவனை அங்கு வந்த ஒருவர் மீட்டு கரை சேர்த்தார். மற்றொருவர் புடேராவை மீட்க போராடினர். ஆனால் சிறுவனை அவரால் பிடித்து இழுக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் சிறுவன் காணாமல் போனார். இதனால் அவனை மீட்கச் சென்றவர் ஓய்ந்துபோய் கடற்கரைக்குத் திரும்பினார். சில மணி நேரங்களுக்குப் பிறகு புடேராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கோப்புப் படம்: ஷின்மின் -

சாங்கி கட­லில் சிறு­வன் மூழ்­கிய சம்­ப­வம் எதிர்­பா­ராத துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது என்று மரண விசா­ரணை அதி­காரி தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மண­லில் வீடு கட்­டி விளை­யா­டிய 14 வயது சிறு­வன் தண்ணீரில் தன் மீதி­ருந்த மணலை கழுவச் ெசன்­றான். அப்­போது ஏற்­பட்ட திடீர் சுழற்சியில் அவன் அடித்­துச் செல்­லப்­பட்­டான்.

அவனை மீட்க சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை இரண்­டரை மணி நேரம் போரா­டி­யது. ஆனால் புடேரா முஹ­மட் இந்த்ரா ஷாஸ்­ரைன் சுஸைய்­னி­யின் உடல் மட்டுமே கிடைத்தது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நடை­பெற்ற மரண விசா­ர­ணை­யில் நேற்று தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

"இது ஒரு எதிர்­பா­ராத துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­ப­வம்," என்று மரண விசா­ரணை அதி­கா­ரி­யான கமலா பொன்­னம்­ப­லம் குறிப்­பிட்­டார்.

கடற்­க­ரை­யில் குழந்­தை­கள் எப்­படிப் பாது­காப்­பாக விளை­யாட வேண்­டும் என்­பதைப் போதிக்க வேண்­டும் என்று தனது தீர்ப்­பில் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

சிறு­வன் புடேரா தாயாரிடம் கூறிவிட்டு கடற்­க­ரைக்­குச் சென்றி ருந்தான்.

கடற்­க­ரை­யில் தனது நண்­பர் ­க­ளு­டன் அவன் காற்­பந்து உள்­ளிட்ட விளை­யாட்­டு­களை விளை­யா­டி­னான்.

மண­லில் வீடு கட்­டி விளை­யா­டிய பிறகு நீச்­சல் தெரி­யாத அவன் தன்னைச் சுத்­தம் செய்து கொள்ள தண்­ணீ­ருக்­குள் சென்றான்.

அப்­போது ஏற்­பட்ட வலு­வான நீரோட்­டத்­தில் அவன் அடித்­துச் செல்­லப்­பட்­டான்.

சத்­தம் கேட்டு அங்கு வந்த வழிப்­போக்­கர் ஒரு­வர் தண்­ணீ­ருக்­குள் சென்று நண்­பனை மீட்டு கரை சேர்த்தார்.

அங்கிருந்த மற்­றொரு நபர், புடே­ராவை மீட்க தண்­ணீ­ருக்­குள் இறங்­கி­னார். ஆனால் தண்­ணீ­ரில் போரா­டிய புடே­ராவை அவ­ரால் காப்பாற்ற முடி­ய­வில்லை.

புடேரா சிறிது நேரத்தில் காணா­மல் போன­தால் உதவி செய்ய வந்­த­வர் களைப்­பு­டன் கரைக்­குத் திரும்­பி­னார்.

பிற்­ப­கல் 3.30 மணி அள­வில் தக­வல் கிடைத்து அங்கு வந்த குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் சிறு­வ­னைத் ேதடினர். இரண்­டரை மணி நேரத்­துக்­குப் பிறகு அவ­னது உட­ல் கரையில் ஒதுங்கியது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு முன்பு அளித்த பேட்­டி­யில் புடேரா அமை­தி­யா­ன­வன், மற்­ற­வ­ர்களுடன் அதி­கம் பேச மாட்­டான் என்று அவ­னு­டைய உற­வி­னரான நூஸ் அஸ்­மான் மார்வி கூறி­யி­ருந்­தார்.

தாய், தந்­தை­யி­டம் அவன் நல்­ல­வி­த­மாக நடந்­து­கொள்­வான் என்றும் அவர் தெரி­வித்­தார்.

நேற்று மரண விசா­ரணை அறிக்கை வெளி­யிட்­ட­போது நீதி­மன்­றத்­துக்கு சிறு­வ­னின் தாயார் வந்­தி­ருந்­தார்.

ஆனால் ஊட­கங்­க­ளி­டம் அவர் பேசவில்லை.