11 பெண்களிடம் மோசடி

11 பெண்களிடம் மோசடி

1 mins read

பாலி­யல் தொழில் செய்­யும் பெண்­களை ஏமாற்றி உட­லு­ற­வு கொண்ட மோசடி ஆசா­மிக்கு ஏப்­ரல் 20ஆம் தண்­டனை விதிக்­கப்­படும் என்று நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இளம்ெ­பண்­க­ளைத் தேடும் பணக்­கா­ரர்­களை அறி­மு­கப்­ப­டுத்து வதா­கக் கூறி அதற்கு முத­லில் தான் சோதித்துப் பார்க்க வேண்­டும் என்று கூறி குறைந்­தது 11 பெண்­களை ஏமாற்றி அவர் பாலி­யல் உற­வில் ஈடு­பட்­டுள்­ளார்.

நேற்று தன் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை தற்­போது 39 வய­தா­கும் டி பியர்ஸ் வோங் (படம்) ஒப்­புக்­கொண்­டார்.

இரண்டு பெண்­கள் அவ­ரு­ட­னான தொடர்பை துண்­டிக்க முயற்சி செய்­த­போது அவர்­க­ளு­டைய நிர்­வா­ணப் படங்­களை வெளி­யி­டப் போவ­தா­க­வும் அவர் மிரட்­டி­யுள்­ளார்.

தற்­போது பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்ள வோங்­குக்கு ஏப்­ரல் 20ஆம் தேதி தண்­டனை விதிக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.