வாகன நிறுத்துமிட குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்க கேமரா பொருத்தப்பட்ட வாகனம்; ஆணையம் சோதனை

வாகன நிறுத்துமிட குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்க கேமரா பொருத்தப்பட்ட வாகனம்; ஆணையம் சோதனை

2 mins read

தவ­றான இடங்­களில் வாக­னங்­கள் நிறுத்­தப்­ப­டு­வ­தைக் கண்­டு­பி­டிக்க அதி­ந­வீன பரி­சோ­தனை முறையை நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் ஆராய்ந்து வரு­கிறது.

இதன்­படி கேமரா பொருத்­தப்­பட்ட வாக­னங்­கள் சாலை­களில் வலம் வரு­வதை எதிர்­பார்க்­க­லாம்.

நட­மா­டும் வாக­னங்­க­ளின் காணொ­ளி­க­ளைப் பகுப்­பாய்வு செய்து பல்­வேறு வாகன நிறுத்­து­மி­டக் குற்­றச்­செ­யல்­களை அடை­யா­ளம் காண்­பதே புதிய முயற்­சி­யின் நோக்­கம் என்று ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இரட்டை மஞ்­சள் கோட்­டுக்கு அருகே வாக­னங்­களை நிறுத்­து­வது, ஒரு தடம் கொண்ட சாலை­யில் வாகனங்­களை நிறுத்­து­வது உள்­ளிட்ட குற்­றச்­செ­யல்­கள் இதன் மூலம் கண்­டு­பி­டிக்­கப்­படும்.

எல்லா பரு­வ­நி­லை­யி­லும் சூழ்­நி­லை­யி­லும் செயல்­படும் என எதிர்­பார்க்­கப்­படும் புதிய தொழில்­நுட்­பம், கார்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட இடங்­களில் கன­ரக வாக­னங்­கள் நிறுத்­தப்­ப­டு­வ­தை­யும் கண்­ட­றி­யும்.

இந்­தச் சோதனை வெற்­றி­க­ர­மாக அமைந்­தால் வாகன நிறுத்து மிடக் குற்­றச்­செ­யல்­களைக் கண்டு பிடிப்­ப­தற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் மனி­த­வ­ளம் குறை­யும் என்று எதிர் பார்க்­கப்­ப­டு­கிறது.

கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தை ஓட்ட ஓட்டுநர் மட்டுமே தேவைப்படுவார்.

புதிய தொழில்­நுட்­பம், மூன்று கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது.

வீடியோ கேமரா, வாக­னத்­தின் எண் பல­கையை அடை­யா­ளம் காணும் மென்­பொ­ருள், காணொ­ளி­களைப் பகுப்­பாய்வு செய்து வாக­னம் நிறுத்­து­மிடக் குற்­றச்­செ­யல்­களை கண்­ட­றி­யும் செயற்கை நுண்­ண­றிவு இயந்­தி­ரம் ஆகியவை அவை.

லிட்­டில் இந்­தியா, தஞ்­சோங் பகார் உள்ளிட்ட சாலை­களில் ஆறு மாதச் சோதனை 2021ஆம் ஆண்­டின் 2வது பாதி­யில் தொடங்­கும் என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் அறிக்கை வாயிலாகத் தெரி­வித்­தது.

வார நாட்­களில் காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை­யி­லும் 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை­யி­லும் சோதனை மேற்­கொள்­ளப்­படும் என்று அது மேலும் கூறி­யது.