'நியூசிலாந்தில் சிங்கப்பூரர் மரணமடைந்த சாலை விபத்துக்கு சோர்வே காரணம்'

'நியூசிலாந்தில் சிங்கப்பூரர் மரணமடைந்த சாலை விபத்துக்கு சோர்வே காரணம்'

2 mins read

நியூ­சி­லாந்­தில் 2017ல் நிகழ்ந்த சாலை விபத்­தில் சிங்­கப்­பூ­ரர் உட்­பட இளம் தம்­ப­தி­யர் மாண்­ட­னர்.

இதற்கு காரை ஓட்­டி­ய­வ­ருக்கு ஏற்­பட்ட சோர்வே கார­ணம் என்று மரண விசா­ரணை மூலம் தெரிய வந்­துள்­ளது.

நியூ­சி­லாந்­துக்கு இரவு முழு­வ­தும் விமா­னம் மூலம் பய­ணம் செய்த தம்­ப­தி­யர் ஒரு வேனை வாட­கைக்கு எடுத்து ஓட்­டிச் சென்­ற­னர். மூன்று மணி நேரத்­திற்குள் நெடுஞ்­சா­லை­யில் அவர்­க­ளு­டைய வேன் விபத்தில் சிக்கியது.

இதில் சின் சே ஹாவ், 38, ஓங் சீ யீ, 29 ஆகிய இரு­வ­ரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

சின்­னுக்கு உறக்கக் கலக்கத்தில் சோர்வு ஏற்­பட்­டி­ருக்­க­லாம்.

அத­னால் வேனில் பய­ணம் செய்து­ கொண்­டி­ருந்­த­போது தன்­னை­ய­றி­யா­மல் சற்று அயர்ந்­தி­ருக்­க­லாம் என்று நியூ­சி­லாந்து போலி­சார் கருது­வ­தாக கடந்த மாதம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் நியூ­சி­லாந்து மரண விசா­ரணை அதி­காரி அன்னா டட்­டன் தெரி­வித்­தி­ருந்­தார்.

"நீண்­ட­நேர விமா­னப் பய­ணத்­துக்­குப் பிறகு நன்­றாக தூங்கி ஓய்வு எடுக்­கும்­படி ஓங், சின் ஆகியோருக்கு அறிவுரை வழங்கப் பட்டது.

ஆனால் அவர்­கள் தொடர்ந்து வேனை ஓட்­டிச் சென்­றுள்­ள­னர்.

சோர்­வுடன் வேனை ஓட்­டி­ய­தால்­தான் இரு­வ­ரும் மர­ணம் அடைந்­த­னர் என்­பது தெள்ளத் தெளி­வா­கத் தெரி­கிறது," என்று அக்­டோ­பர் மாதக் கண்­டு­பி­டிப்பை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு அவர் கூறி­னார்.

2017 மே 4ஆம் தேதி கிறைஸ்ட்­சர்ச்­சி­லி­ருந்து 40 கிலோ மீட்­டர் தொலை­வில் பேங்க்­சைட் அருகே நெடுஞ்­சா­லை­யில் அந்த விபத்து நிகழ்ந்தது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து புறப்­பட்ட திரு சின்­னும் ஓங்­கும் காலை 8.30 மணிக்கு கிறைஸ்ட்­சர்ச் விமான நிலை­யத்தை அடைந்தனர்.

ஏறக்­கு­றைய பத்து மணி நேரம் அவர்­கள் விமா­னத்­தில் பய­ணம் செய்­துள்ளனர். இரண்டு மணி நேரத்­துக்­குப் பிறகு காலை 10.30 மணி­ய­ள­வில் ஒரு வேனை வாட­கைக்கு எடுத்து அவர்­கள் பய­ணத்­தைத் தொடர்ந்­த­னர்.

பிற்­ப­கல் ஒரு மணி அள­வில் திரு சின் ஓட்­டிச் சென்ற வேன் சாலை­யி­லி­ருந்து விலகி ஓடி­யது. அப்­போது வேனை அவர் கட்­டுப் பாட்டுக்குள் கொண்­டு­வர முயற்சி செய்­தார்.

ஆனால் அதற்குள்ளாக எதிரே வந்த டிரக் மீது அவ­ரது வேன் மோதியது. இதில் இரு­வ­ரும் படு­கா­யம் அடைந்து அதே இடத்­தில் மாண்­ட­னர்.

டிரக் ஓட்­டு­ந­ருக்கு முழங்­கை­யில் காயம் ஏற்­பட்­டது.

இந்த நிலையில் களைப்பைப் போக்குவதற்கு உறக்கம் ஒன்றே சிறந்த வழி என்று நியூசிலாந்து போலிசார் கூறியுள்ளனர்.

வாகனம் ஓட்டும்போது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது 100 கிலோ மீட்டருக்கு ஒரு முறை ஓய்வு எடுப்பது அவசியம் என்று அதிகாரி டட்டன் கூறியுள்ளார்.