கொள்முதல் நிறைவடைந்தது; யுனிவர்சல் டெர்மினல் எண்ணெய் சேமிப்பு முனையத்தில் 41% பங்கை ஜூரோங் போர்ட் வாங்கியது

சிங்கப்பூர் துறைமுகத்தை நிர்வகித்து நடத்தும் ஜூரோங் போர்ட் நிறுவனம், பெரிய எண்ணெய் சேமிப்பு முனையம் ஒன்றில் தன்னுடைய கொள்முதலைப் பூர்த்தி செய்து இருக்கிறது.

அந்த முனையம், லிம் குடும்பத்திற்குச் சொந்தமான ஹின் லியோங் என்ற நொடித்துப்போன எண்ணெய் வர்த்தக நிறுவனத்தின் முனையமாக இருந்தது.

‘யுனிவர்சல் டெர்மினல்’ என்ற அந்த எண்ணெய் சேமிப்பு முனையத்தில் 41 விழுக்காட்டு பங்கை வாங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்து இருப்பதாக ஜூரோங் போர்ட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

ஜூரோங் தீவில் இருக்கும் அந்த முனையம், லிம் ஊன் குயின் என்ற முன்னாள் எண்ணெய் வர்த்தகருக்குச் சொந்தமான ஆகப் பெரிய எண்ணெய் மற்றும் கப்பல் துறை சொத்தாக முன்பு இருந்தது.

அந்தச் சொத்துக்கு லிம்மின் மகனான இவான் லிம் சீ மெங், புதல்வி லிம் ஹுவே சிங் ஆகியோரும் உரிமையாளர்களாக இருந்தார்கள். யுனிவர்சல் குரூப் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அந்த முனையத்தில் 41 விழுக்காடு பங்கைச் சொந்தமாகக் கொண்டு லிம் குடும்பம் முன்பு நிர்வகித்து வந்தது.

ஹின் லியோங் நிறுவனம் ஆசியாவின் ஆகப் பெரிய எண்ணெய் வர்த்தகமாக முன்பு திகழ்ந்தது. ஏறத்தாழ US$3.5 பில்லியன் கடன் ஏற்பட்டதை அடுத்து அந்த நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் கலைக்கப்பட்டது.

இதனிடையே, ஜூரோங் போர்ட் கொள்முதலின் மதிப்பு $400 மில்லியன் முதல் $500 மில்லியன் வரை இருக்கும் என்று சந்தை தகவல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!