தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காகவும் விசா முடிந்தபின்னும் தங்கியிருந்ததற்காகவும் ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரர் நாடுகடத்தல்

1 mins read
7877f946-707e-44c3-9f16-35941bfd9ff8
சட்ட விரோதமாக பாலியல் சேவை வழங்கியதன் மூலம் கொவிட்-19 பொதுச் சுகாதார நெறிமுறைகளையும் பெயர் தெரிவிக்கப்படாத அப்பெண் (நடுவில்) மீறியதாகச் சொல்லப்பட்டது. படம்: ஆஸ்திரேலிய எல்லைப் படை டுவிட்டர் -

மாணவர் விசா முடிந்தபின்னும் பிரிஸ்பனில் தங்கியிருந்த சிங்கப்பூர் பெண்ணை நாடுகடத்தியிருப்பதாக ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது.

அந்தப் பெண் எங்கு அனுப்பப்பட்டார் எனும் விவரம் தெரிவிக்கப்படவில்லை.

அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அந்நாட்டின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில், தெரிந்தே பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றம் முதன்முறையாக உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சட்ட விரோதமாக பாலியல் சேவை வழங்கியதன் மூலம் கொவிட்-19 பொதுச் சுகாதார நெறிமுறைகளையும் பெயர் தெரிவிக்கப்படாத அப்பெண் மீறியதாகச் சொல்லப்பட்டது.

கடந்த மாதம் 25ஆம் தேதி பிடிபட்ட அவர், மார்ச் 11ல் நாடுகடத்தப்பட்டார்.