மின்வணிக மோசடி: போலிஸ் எச்சரிக்கை

மின்வணிக மோசடி: போலிஸ் எச்சரிக்கை

1 mins read
8309f723-6ea3-40b5-adc1-21946e9e442a
வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரசாங்க அமைப்புகள் ஒப்புதல் வழங்காது என்றும் அத்தகைய போலிஸ் அறிக்கைகள் போலியானவை என்றும் பொதுமக்களுக்கு போலிஸ் நினைவுறுத்தியுள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம். -

கெரொசல் இணையத்தளம் வாயிலாக மின்னணுச் சாதன விற்பனை தொடர்பான மின்வணிக மோசடிகள் குறித்து கவனமாக இருக்கும்படி பயனீட்டாளர்களை போலிஸ் எச்சரித்துள்ளது.

அரசாங்கத்தால் உறுதிசெய்யப்பட்ட சில்லறை விற்பனை சேவைகளை வழங்குவதாக மோசடிப் பேர்வழிகள் தெரிவிக்கலாம்.

அதற்குச் சான்றாக, அந்த மோசடி விற்பனையாளர் போலியான போலிஸ் அறிக்கையை வழங்கக்கூடும்.

அத்தகைய சம்பவங்களில், அந்த மோசடிப் பேர்வழி கெரொசல் இணைய வணிகத்தளம் மூலமாக இல்லாமல், வேறு வகையில் பணம் அனுப்பும்படி கூறலாம் என்றும் டெலிகிராம் சமூக ஊடகம் வழியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொருள்களை விநியோகிக்குமுன் அந்த மோசடிப் பேர்வழி தரும் வங்கிக் கணக்கு எண்ணிற்குப் பணத்தை அனுப்பம்படி பாதிக்கப் பட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சொன்னபடி பொருளும் வந்து சேராமல், விற்பனையாளரையும் தொடர்புகொள்ள முடியாமல் போன பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.

வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரசாங்க அமைப்புகள் ஒப்புதல் வழங்காது என்றும் அத்தகைய போலிஸ் அறிக்கைகள் போலியானவை என்றும் பொதுமக்களுக்கு போலிஸ் நினைவுறுத்தியுள்ளது.