மியன்மார் நிலவரம்: ஆசியான் ராணுவத் தலைவர்கள் கவலை

மியன்மார் நிலவரம்: ஆசியான் ராணுவத் தலைவர்கள் கவலை

2 mins read

வட்­டா­ரத்­தி­லும் அனைத்­து­லக அள­வி­லும் நில­வும் பாது­காப்­புச் சவால்­கள் பற்றி ஆசி­யான் நாடு­க­ளின் ராணு­வத் தள­ப­தி­கள் கலந்­து­ரை­யா­டி­னர். தங்­க­ளது படை­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­கள் குறித்­தும் அப்­போது அவர்­கள் கலந்து ஆலோ­சித்­த­னர். புருணை தலைமை ஏற்ற 'ஆசி­யான தற்­காப்­புப் படைத் தலை­வர்­க­ளின் 18வது சந்­திப்பு' என்­னும் இணைய நிகழ்வு நேற்று முன்தி­னம் நடை­பெற்­றது. அதில் எல்லா 10 ஆசி­யான் உறுப்பு நாடு­க­ளின் பிர­தி­நி­தி­களும் பங்­கேற்­ற­னர். சிங்­கப்­பூர் சார்­பாக தற்­காப்­புப் படைத் தலை­வர் லெப்­டி­னன்ட் ஜென­ரல் மெல்­வின் ஓங் கலந்­து­கொண்­டார்.

இந்த வட்­டா­ரத்­தில் நில­வும் பாது­காப்­புச் சவால்­கள் மீது கவ­னம் செலுத்­து­வ­தில் உறுப்பு நாடு­க­ளின் ராணு­வப் படை கொண்­டி­ருக்­கும் ஒட்­டு­மொத்த கடப்­பாடு மற்­றும் பொறுப்பு ஆகி­ய­வற்றை மறு­உ­று­திப்­ப­டுத்­தும் வகை­யி­லான கூட்­ட­றிக்கை ஒன்றை ராணு­வத் தலை­வர்­கள் வெளி­யிட்­ட­தாக சிங்­கப்­பூ­ரின் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

ஆசி­யான் ராணு­வப் படை­க­ளின் ஈராண்டு செயல்­பாட்டு பணித்­திட்­டத்­திற்­கான ஒப்­பு­த­லை­யும் அப்­போது அவர்­கள் வழங்­கி­னர். வட்­டாரப் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தில் ஆசி­யான் ராணு­வத்­தி­ன­ருக்கு ஆத­ரவு வழங்­கக்கூடிய ஆசி­யான் ராணு­வப் பயிற்­சிக்­கான செயல்­திட்­டம் ஒன்றைத் தாக்­கல் செய்­துள்­ள­தாக புருணை தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

சிங்­கப்­பூ­ரின் மெல்­வின் ஓங் இந்­நி­கழ்­வில் உரை­யாற்­று­கை­யில் மியன்­மார் நில­வ­ரம் குறித்து ஆழ்ந்த கவலை தெரி­வித்­தார். ஆயு­த­மற்­றுப் போரா­டும் மக்­கள் மீது ஆபத்தை ஏற்­

ப­டுத்­தும் வகை­யி­லான ஆயு­தங்­க­ளைப் பயன்

­ப­டுத்­து­வதை மியன்­மார் ராணு­வம் தவிர்க்க வேண்­டும் என அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இதர ராணு­வத் தலை­வர்­களும் இதே­போன்ற கவ­லையை வெளிப்­ப­டுத்­தி­னர். மியன்­மா­ரின் தலை­மைத் தள­பதி மின் ஆங் லைங்­கும் இந்த நிகழ்­வில் கலந்­து­கொண்­டார். கடந்த மாதம் 1ஆம் தேதி ராணு­வம் நடத்­திய ஆட்­சிக் கவிழ்ப்­புக்­குப் பின்­னர் மியன்­மா­ரின் அர­சி­யல் நிலைத்­தன்மை சீர்­கு­லைந்து வரு­கிறது.