பாலர் பள்ளி வெளிப்புற சுற்றுலா பற்றி விசாரணை

பாலர் பள்ளி வெளிப்புற சுற்றுலா பற்றி விசாரணை

1 mins read

பாலர் பள்­ளி­யைச் சேர்ந்த மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் என 40 பேர் வெளிப்­புற நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டது தொடர்­பாக ஆரம்­ப­கால பாலர் பருவ மேம்­பாட்டு வாரியம் விசா­ரணை நடத்தி வரு­கிறது. கேம்­பி­ரிட்ஜ் பாலர் பள்ளி நேற்று முன்­

தி­னம் மாண­வர்­களை பாசிர் ரிஸ் பூங்­கா­வுக்கு அழைத்­துச் சென்­றது. இதனை

அந்­தப் பள்­ளிக் குழு­மத்­தின் இயக்­கு­நர் உறுதி செய்­தார். இயற்­கையை ரசிப்­ப­தற்­காக தமது குழு­மத்­தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாண­வர்­களை அழைத்­துச் சென்­ற­தாக அவர் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார். இவ்­வாண்டு தொடக்­கம் முதல் பாலர் பள்ளி மாண­வர்­

க­ளின் வெளிப்­புற நட­வ­டிக்­கை­கள் அனு­

ம­திக்­கப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்த முக­வை­யின் பேச்­சா­ளர், 50 பேர் வரை அடங்­கிய குழு­வைச் சேர்ந்­தோர் குழந்­தை­க­ளாக இருப்­பி­னும் பெரி­ய­வர்­க­ளாக இருப்­பி­னும் பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிப்­பது அவ­சி­யம் என்­றார். பாசிர் ரிஸ் பூங்­கா­வில் இந்த நடை­முறை பின்­பற்­றப்­பட்­ட­னவா என்­ப­தை விசாரித்து வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.