தடுப்பூசி சான்றிதழ் அங்கீகாரம் பற்றி நியூசிலாந்துடன் ஆலோசனை

கொவிட்-19 தடுப்­பூ­சிச் சான்­றி­தழை இரு­த­ரப்­பி­லும் அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பில் இணைந்து பணி­யாற்­று­வ­தன் சாத்­தி­யம் குறித்து சிங்­கப்­பூ­ரும் நியூ­சி­லாந்­தும் கலந்து ஆலோ­சித்து உள்­ளன.

இரு நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­களும் இது பற்றி ஆலோ­சனை நடத்தி உள்­ள­னர். இந்த இணை­யம் வழி சந்­திப்­பின் போது சிங்­கப்­பூ­ருக்­கும் நியூ­சி­லாந்­துக்­கும் இடை­யி­லான அணுக்க உறவை இரு அமைச்­சர்­க­ளும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர். இரு நாடு­களும் தங்­க­ளுக்­கான தடுப்­பூ­சித் திட்­டங்­க­ளைத் தொடங்கி இருக்­கும் வேளை­யில் அனைத்­து­ல­கப் பய­ணத்தை மீண்­டும் தொடங்­கு­வ­தில் தடுப்பூசி சான்­றி­தழ்­கள் முக்­கிய பங்கு வகிக்­கும் என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்டு உள்­ளார்.

அண்­மை­யில் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்த கருத்தை எதி­ரொ­லிக்­கும் வகை­யில் டாக்­டர் விவி­யன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

கொவிட்-19 தடுப்­பூ­சிச் சான்­றி­தழை இரு­த­ரப்­பி­லும் அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பாக மற்ற நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் பேசி வரு­வ­தா­க­வும் உல­க­ள­வி­லான பய­ணத்தை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கான அவ­சி­ய­மான நட­வ­டிக்கை இது என்­றும் சென்ற மாதம் திரு லீ தெரி­வித்து இருந்­தார்.

அறி­வார்ந்த தேச நட­வ­டிக்­கைக்­குப் பொறுப்பு வகிப்­ப­வ­ரு­மான டாக்­டர் விவி­யன் சென்ற மாதம் கூறு­கை­யில், ஒரு­வ­ரின் தடுப்­பூசி நிலை­யை­யும் கொவிட்-19 பரி­சோ­தனை முடி­வு­க­ளை­யும் உள்­ள­டக்­கிய மின்­னி­லக்­கச் சான்­றி­தழ்­கள் போன்ற சுகா­தார ஆவ­ணங்­க­ளின் எல்லை

கடந்த சரி­பார்த்­த­லுக்­கான உல­கத் தர­நி­லையை சிங்­கப்­பூர் உரு­வாக்கி இருப்­ப­தா­கச் சொல்லி இருந்­தார்.

அத­னைத் தொடர்ந்து இம்­மா­தத் தொடக்­கத்­தில், ஐஏ­டிஏ எனப்­படும் 'அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கத்­தின் பயண அட்டை' என்­னும் கைபே­சிச் செய­லியை சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் சோதித்­துப் பார்த்­தது.

பய­ணி­க­ளின் கொவிட்-19 பரி­சோ­தனை முடி­வு­க­ளை­யும் தடுப்­பூசி நிலை­யை­யும் சரி­பார்க்­கும் வசதி கொண்­டி­ருக்­கும் அந்­தச் செய­லியை சோதித்­துப் பார்த்த முதல் விமான நிறு­வ­னம் அது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!