செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

கிட்டத்தட்ட பாதிப்பேரிடம்

சரியான தகவல் முறை இல்லை

சரியான தகவல் முறையைக் குறிப்­பி­டும்

தக­வல் சுகா­தா­ரம் பற்றி சிங்­கப்­பூ­ரில் ஆய்வு ஒன்று மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளது. '2021 எடெல்­மேன் டிரஸ்ட் பாரோ­மீட்­டர்' என்­னும் தலைப்­பி­லான அந்த ஆய்வு ஐந்­தில் ஒரு­வ­ருக்­கும் குறை­வான சிங்­கப்­பூ­ரரே நல்ல தக­வல் சுகா­தார முறை­யைக் கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கிறது. தாங்­கள் கண்ட சுவாரசியமான தகவலைப் பரப்­பு­வ­தில் பல­ரும் உடன்பாடு கொண்டிருப்பதாகவும் ஆய்­வ­றிக்­கைக் குறிப்­பி­டு­கிறது.

சரி­யான தக­வல் முறை பின்­பற்­றப்­ப­டு­வது குறித்து அறிய நான்­கு­வித அள­வீ­டு­களை ஆய்வு பயன்­ப­டுத்­தி­யது.

தொடர்ந்து செய்­தி­யில் ஈடு­பாடு கொள்­கி­றார்­களா, வெவ்­வேறு கண்­ணோட்­டத்­தைக் கொண்­டி­ருக்­கி­றார்­களா, தக­வல்­க­ளைச் சரி­பார்க்­கி­றார்­களா, சரி­யா­ன­து­தானா என்று அறி­யப்­ப­டாத தக­வலை பரப்­பி­வி­டா­மல் தவிர்க்­கி­றார்­களா - என்ற அள­வீ­டு­கள் அவை. இவற்­றில் மூன்று அல்­லது அதற்கு மேல் உள்ள அள­வீ­டு­களை நல்ல முறை­யில் கொண்­டி­ருப்­ப­வர்­களே சரி­யான தக­வல் சுகா­தா­ரத்­தைப் பெற்­றி­ருக்­கி­றார்­கள் என கணிக்­கப்­பட்­டது. ஆனால், 46 விழுக்­காட்டு சிங்­கப்­பூ­ரர்­கள் ஓர் அள­வீடு அல்­லது பூஜ்­யம் அள­வீட்­டைக் கொண்­டி­ருப்­பது ஆய்­வில் தெரிய வந்­தது. அதா­வது, இவர்­கள் சரி­யான தக­வல் அல்­லது தக­வலைக் கையாள்­வ­தில் சுகா­தா­ர­மான நிலை­யைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது அதன் பொருள்.

53 தனியார் பாலர் பள்ளி குழந்தைகளுக்கு உதவ பயிற்சி

இளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய புதிய திட்டத்தின்கீழ் 53 தனியார் பாலர் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 150 அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இளவயதுக் குழந்தைகளின் வளர்ச்சித்திறனுக்குத் தேவைப்படும் அம்சங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முன்கூட்டியே உதவுவதற்கான பயிற்சிகள் ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு அளிக்கப்படும். அதன் தொடக்கமாக பாலர் பள்ளி முத்திரை தாங்கிய ஆறு பள்ளிகள் சிறப்புப் பராமரிப்பு நடவடிக்கையைத் தங்களது மையங்களில் தொடங்கிவிட்டன. 'பிசி பீஸ் ஏஷியா' என்னும் அமைப்பின்கீழ் இவை இயங்குகின்றன. 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பாலர் பள்ளி வருகைகளின் அடிப்படையில், ஒவ்வொரு மையத்திலும் 3 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரையிலான குழந்தைகளுக்கு வளர்ச்சிக்கான தேவை இருந்தது தெரிய வந்தது. வளர்ச்சித் தேவை என ஒரு குழந்தை அடையாளம் காணப்பட்டால் அந்தக் குழந்தையின் ஆசிரியருக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. அவருக்கு உதவ ஒரு குழு சென்று, குழந்தையின் நிலையை ஆராய்ந்து அதற்கான உத்திகளை ஆசிரியருக்குத் தெரிவிப்பர். இது இப்போதைய நிலை. புதிய திட்டத்தின்கீழ் ஆண்டிறுதியில் பள்ளி அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு பள்ளியிலும் முன்கூட்டி தலையிட்டு உதவக் கூடிய சிறப்பு அலுவலர்கள் இருப்பர். தீர்வுகளையும் உத்திகளையும் கையாளும் திறனை அவர்கள் பெற்றிருப்பர்.