கல்லீரல் நன்கொடை: வலி குறையும், விரைவில் குணம்

கல்லீரல் நன்கொடை: வலி குறையும், விரைவில் குணம்

2 mins read

துளையிட்டு உறுப்பைப் பெறும் முறை காரணமாக தழும்பும் சிறியதாக இருக்கும்

சிங்­கப்­பூ­ரில் கல்­லீ­ரல் நன்­கொ­டை­யில் புதிய ஒரு முன்­னோடி தொழில்­நுட்­பம் இப்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இந்­தத் தொழில்­நுட்­பம் மூலம் கொடை­யா­ளர்­க­ளுக்கு வலி குறை­யும். அவர்­கள் விரை­வில் குண­மடை­ய­லாம். உட­லில் தழும்­பும் சிறி­ய­தா­கவே இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

ஒரு­வ­ரின் உட­லில் இருந்து கல்லீ­ரலை நன்­கொ­டை­யா­கப் பெறு­வ­தற்கு வழி­வ­ழி­யா­கப் பயன்­படுத்­தப்­படும் அறு­வை­ சி­கிச்சை முறை மூலம் நன்­கொ­டை­யா­ள­ரின் உட­லில் 20 முதல் 25 செ.மீ. வரை நீண்ட தழும்பு ஏற்­படும்.

இத­னால் நன்­கொ­டை­யா­ளர்­கள் பல­ரும் தயங்­கு­வ­துண்டு.

ஆனால் இப்­போ­தைய புதிய முறைப்­படி கல்­லீ­ரல் நன்­கொ­டை­யா­ளர்­கள் அதி­கம் பேர் முன் வரு­வார்­கள் என்­ப­தால் பல உயிர்­களை­யும் காக்க முடி­யும் என்ற நம்­பிக்கை நில­வு­கிறது.

புதிய வகை துளை­யீட்டு சிகிச்சை முறை மூலம் நன்­கொடை­யா­ள­ரின் உட­லில் 5 செ.மீ. முதல் 7 செ.மீ. நீண்ட தழும்பே இருக்­கும். உறுப்பு மாற்று சிகிச்­சைக்­கான தேசிய பல்­க­லைக்­க­ழக நிலை­யத்­தில் கல்­லீ­ரல் உறுப்பு மாற்று பிரி­வில் மூத்த ஆலோ­ச­க­ராக இருக்­கும் இணைப் பேரா­சி­ரி­யர் ஆல்­ஃபி­ரட் கோ, இந்­தப் புதிய முறை பற்றி தென்­கொ­ரி­யா­வில் பயின்று வந்து இங்கு அதை அறி­மு­கப்­படுத்தினார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 2017 நவம்­பர் முதல் இவ­ரு­டைய குழு இத்­த­கைய 15 உறுப்பு மாற்று சிகிச்­சை­களைச் செய்­துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்­ஹெல்த் டியூக்-என்­யு­எஸ் உறுப்பு மாற்று நிலை­யத்­தில் 2019 மார்ச்­சில் இத்­த­கைய துளையீட்டு முறையிலான நன்­கொடை சிகிச்சை முதன்முதலாக இடம்­பெற்­றது.

இந்­தப் புதிய முறை வெற்­றி­க­ர­மா­ன­து என்று மேன்மேலும் அறி யப்படும்போது மேலும் பலர்­ கொடை வழங்க முன்­வ­ரு­வார்கள் என்று நம்­பு­வ­தாக பேரா­சி­ரி­யர் கோ கூறி­னார். சென்ற ஆண்டு ஜூன் மாத நில­வ­ரப்­படி கல்­லீ­ர­லைப் பெறு­வதற்கு 45 பேர் காத்­தி­ருந்­த­னர்.

கல்­லீ­ரலைத் தான­மா­கப் பெற ஒரு­வர் ஏறக்­கு­றைய 20 மாதம் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை இங்கு இருக்­கிறது.

புதிய துளை­யீட்டு நன்­கொடை முறைக்கு ­கொ­டை­யா­ளர்­களில் ஏறத்­தாழ 10 முதல் 20 விழுக்­காட்டி­னரே தகுதி பெறு­கி­றார்­கள் என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது.