எண்ணெய் கப்பலில் விபத்து: 24 டன் அதிக எடையுடன் கூடிய திசை திருப்பும் கருவி கீழே விழுந்ததால் ஊழியர் மாண்டார்

எண்­ணெய் கப்­பல் ஒன்­றில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் கப்­பல் திசை திருப்­பும் கருவியைப் பொருத்­திக்கொண்டு இருந்தபோது அது கீழே விழுந்­து­விட்­ட­தால் காய மடைந்த கப்­பல் பட்டறை ஊழி­யர் ஒரு­வர் இறந்­து­விட்­டார்.

அந்த 59 டன் எடை­யுள்ள அந்தக் கருவியைக் கப்­ப­லு­டன் இணைக்­கும் கொக்கி ஒன்று கழன்­று­விட்­டதை அடுத்து அது கீழே விழுந்­தது.

அந்­தக் கருவி, எடை வரம்பை­விட 24 டன் அதிக எடை­யு­டன் இருந்­தது.

கெப்­பல் கப்பல் பட்­ட­றை­யில் 'சிட்டி ஆஃப் ஷங்­காய்' என்ற எண்­ணெய் கப்­ப­லில் பழு­து­பார்ப்­புப் பணி­க­ளைச் செய்­து­கொண்­டி­ருந்த மன்­தீப் குமார், 36, என்ற ஊழி­யர் மீது அந்தக் கருவி விழுந்­த­தால் அவர் நிலை தடு­மா­றி­விட்­டார்.

அவ­ரு­டைய வலது கரம் துண்­டிக்­கப்­பட்­டது. கப்பல் திசை திருப்பும் கருவி விழுந்­த­தன் விளை­வாக அந்த ஊழி­ய­ரின் இத­யம் செய­லற்று நின்றது. அவர் மாண்டு­விட்­ட­தாக அதே இடத்­தில் அறி­விக்­கப்­பட்­டது. மியா முகம்­மது மாசும் என்ற மற்­றோர் ஊழி­ய­ரும் அந்­தச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­டார். என்­றா­லும் அவ­ருக்கு மோச­மான காயங்­கள் ஏற்­ப­ட­வில்லை.

இந்த வழக்கை விசா­ரித்த அர­சாங்க மரண விசா­ரணை நீதி­பதி மார்­வின் பே, ஊழி­யர் மன்­தீப் மர­ண­ம­டைந்த சம்­ப­வம், சோக­மான துர­திஷ்­ட­வ­ச­மா­ன தொழில்­துறை சம்பவம் என்று குறிப்­பிட்­டார்.

கன­ரக தொழில்­து­றை­யில் உள்­ள­வர்­கள், தங்­கள் துறை தொடர்­பான ஆபத்­து­களை நன்கு புரிந்­து­கொண்டு அவற்­றைத் தடுத்­துக்­கொள்ள எப்­போ­துமே ஆயத்­த­மாக இருக்க வேண்­டும் என்­பதை இந்­தச் சம்­ப­வம் நினை­வூட்­டு­வ­தா­க­வும் நீதி­பதி தெரி­வித்­தார்.

இத­னி­டையே, மனி­த­வள அமைச்சு அந்­தச் சம்­ப­வத்­தில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு எதி­ராக அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் எடுப்­பது குறித்து பரி­சீ­லித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!