கொள்முதல் நிறைவு; யுனிவர்சல் டெர்மினல் எண்ணெய் சேமிப்பு முனையத்தில் 41% பங்கை ஜூரோங் துறைமுகம் வாங்கியது

கொள்முதல் நிறைவு; யுனிவர்சல் டெர்மினல் எண்ணெய் சேமிப்பு முனையத்தில் 41% பங்கை ஜூரோங் துறைமுகம் வாங்கியது

1 mins read
eb3aa0be-98b4-4a13-bfeb-18bcdcfa6212
யுனிவர்சல் டெர்மினல் என்ற எண்ணெய் சேமிப்பு முனையத்தில், 41 விழுக்காட்டு பங்கு, யுனிவர்சல் குரூப் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக லிம் குடும்பத்துக்குச் சொந்தமானதாக இருந்தது. படம்: ஹின் லியோங் -

ஜூரோங் துறைமுகம், பெரிய எண்­ணெய் சேமிப்பு முனை­யம் ஒன்­றில் தன்னுடைய கொள்­மு­தலைப் பூர்த்தி செய்து இருக்­கிறது.

அந்த முனை­யம், லிம் குடும்­பத்­திற்­குச் சொந்­த­மான ஹின் லியோங் என்ற நொடித்­துப்­போன எண்­ணெய் வர்த்தக நிறு­வ­னத்­தின் முனை­ய­மாக இருந்­தது.

'யுனி­வர்­சல் டெர்­மி­னல்' என்ற அந்த எண்­ணெய் சேமிப்பு முனை­யத்­தில் 41 விழுக்­காட்டு பங்கை வாங்­கும் நட­வ­டிக்­கை­கள் நிறை­வடைந்து இருப்­ப­தாக ஜூரோங் துறைமுகத்தின் பேச்­சா­ளர் ஒரு­வர் உறு­திப்­ப­டுத்­தி­னார் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்­பிட்­டது.

ஜூரோங் தீவில் இருக்­கும் அந்த முனை­யம், லிம் ஊன் குயின் என்ற முன்­னாள் எண்­ணெய் வர்த்­த­க­ருக்­குச் சொந்­த­மான ஆகப் பெரிய எண்­ணெய் மற்­றும் கப்­பல் துறை சொத்­தாக முன்பு இருந்­தது.

அந்­தச் சொத்­துக்கு லிம்­மின் மக­னான இவான் லிம் சீ மெங், புதல்வி லிம் ஹுவே சிங் ஆகி­யோ­ரும் உரி­மை­யா­ளர்­க­ளாக இருந்­தார்­கள். யுனி­வர்­சல் குரூப் ஹோல்­டிங்ஸ் என்ற நிறு­வ­னத்­தின் மூலம் அந்த முனை­யத்­தில் 41 விழுக்­காடு பங்கைச் சொந்தமாகக் கொண்டு லிம் குடும்­பம் முன்பு நிர்வகித்து வந்­தது.

ஹின் லியோங் நிறு­வ­னம் ஆசி­யா­வின் ஆகப் பெரிய எண்­ணெய் வர்த்­த­க­மாக முன்பு திகழ்ந்­தது. ஏறத்­தாழ US$3.5 பில்­லி­யன் கடன் ஏற்­பட்­டதை அடுத்து அந்த நிறு­வனம் இந்த மாதத் தொடக்­கத்­தில் கலைக்­கப்­பட்­டது.

ஜூரோங் துறைமுகக் கொள்­மு­த­லின் மதிப்பு $400 மில்­லி­யன் முதல் $500 மில்­லி­யன் வரை இருக்­கும் என்று சந்தை தக­வல் வட்­டா­ரங்­கள் கணிக்­கின்­றன.