புதிதாக 15 பேருக்குத் தொற்று; அனைவரும் இங்கு வந்தவர்கள்

புதிதாக 15 பேருக்குத் தொற்று; அனைவரும் இங்கு வந்தவர்கள்

2 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நிலவரப்படி புதி­தாக 15 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அவர்­கள் அனை­வ­ருமே வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்தவர்­கள். தனிமை­யில் இருக்க வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

சமூ­கத்­தி­லும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு விடு­தி­க­ளி­லும் நேற்று புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை. வியா­ழக்­கி­ழமை புதி­தாக 15 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் அவர்­களில் 66 வயது இந்­தோ­னீ­சிய மாது ஒரு­வர் என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருந்­தது.

வியா­ழக்­கி­ழமை புதிதாக கிருமி தொற்றிய அனைவரும் வெளி­நாடுகளில் இருந்து வந்­த­வர்­கள். அவர்­க­ளுக்­கும் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

தொடக்­கத்­தில் அவர்­க­ளிடம் தொற்­றுக்­கான அறி­குறி தெரி­ய­வில்லை. தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றி­ய­போது எடுக்­கப்­பட்ட பரி­சோ­தனை மூலம் அவர்­க­ளுக்கு கொரோனா தொற்று இருந்­தது உறு­தி­யா­னது. வியா­ழ­னன்­றும் சமூ­கத்­தில், வெளி­நாட்டு ஊழி­யர் விடுதி­யில் புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை.

இத­னி­டையே, சமூ­கத்­தில் புதி­தாக கிருமி தொற்­றால் பாதிக்­கப்­படு­வோ­ரின் எண்­ணிக்கை கடந்த வாரம் 1 ஆகக் குறைந்­தது என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

வியா­ழக்­கி­ழமை 13 பேர் குண­மடைந்து வீடு திரும்­பி­னர். அவர்­களை­யும் சேர்த்து 59,999 பேர் முழு­மை­யாக குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 60,167 ஆக இருக்­கிறது.

இன்­ன­மும் மருத்­து­வ­ம­னை­யில் 41 நோயா­ளி­கள் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். சமூக நல்­வாழ்வு நிலை­யங்­களில் 94 பேர் குண­மடைந்து வரு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக 30 பேர் பலி­யாகி­விட்­ட­னர். கொவிட்-19 இருந்­தும் இதர கார­ணங்­க­ளால் 15 பேர் மாண்­டுவிட்டனர்.