அனாவசிய பருமன் போனது; சுறுசுறுப்புடன் உடல் நலனுடன் தாதி

அனாவசிய பருமன் போனது; சுறுசுறுப்புடன் உடல் நலனுடன் தாதி

3 mins read
19da87fb-8fef-447a-a336-e35029f5ca22
தாதி நாடியா முன்பு 90 கிலோ எடையுடன் இருந்தார் (இடது). வாழ்க்கைப் பாணியை மாற்றிக்கொண்டதை அடுத்து இப்போது உடல் எடை குறைந்து சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கார­ண­மாக வழக்­கத்­துக்கு மாறாக வீட்­டி­லேயே அடை­பட்டு இருப்­ப­தால் பல­ருக்கு உடல் எடை கூடி இருக்­கும்.

ஆனால் தெம்­ப­னிஸ் பல­துறை மருந்­த­கத்­தில் பணி­யாற்­றும் நாடியா எர்­னி­யாந்தி மாலிக்கி என்ற 35 வயது மூத்த தாதியைப் பொறுத்­த­வரை நிலைமை நேர்மாறா­னது. 16 ஆண்­டு­க­ளாக தாதி­யாக அவர் வேலை பார்க்­கி­றார்.

ஆனா­லும் உடல் நல­னில், சாப்­பாட்­டில் அவர் அவ்­வ­ள­வாக கவ­னம் செலுத்­திய­தில்லை. உடற்­பயிற்சி­யும் அவ்­வ­ள­வாக செய்­வ­தில்லை. சாப்­பாட்டு பிரி­ய­ரான அவர், எதைப்­பற்­றி­யும் கவ­லைப்­படா­மல் அன்­றா­டம் குறைந்­தது ஒரு முறை­யா­வது இனிப்பு சாப்­பிட்­டு­வி­டு­வார்.

இப்­படி இருந்து வந்­த­தால் 1.65 மீட்­டர் உய­ரம் உள்ள அவ­ரின் உடல் எடை 90 கிலோ­வா­கி­விட்­டது.

அவ­ரால் பல­துறை மருந்­த­கத்­தில் சுறுசுறுப்பாக வேலை பார்க்­க­வும் முடி­ய­வில்லை.

சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர் உடல் நல­னில் மற்­ற­வர்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­டாக இருக்­க­வேண்­டும் என்­பதை உணர்ந்துகொண்டு இருந்­த­ார் என்­றா­லும் அதற்கு அவர் முன்­னு­ரிமை கொடுக்­க­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் 2020ல் பொரு­ளி­யல் முடக்­கம் அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து எல்­லாம் மாறி­யது. சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு வேலைச் சுமை கூடி­யது.

வெளி­நா­ட்டு ஊழி­யர்­கள் தங்கும் விடு­தி­யில் செயல்­பட்ட மருத்­து­வக்கூட உதவி ஊழி­ய­ராக தாதி நாடியா நிய­மிக்­கப்­பட்­டார்.

கடும் வெயி­லி­லும் எப்­போ­தும் உடல் முழு­வ­தை­யும் மூடிய உடை. முகக்­க­வ­சம் கையு­றை­க­ளு­டன் அன்­றாடம் சுமார் 4 மணி நேரம் வேலை பார்க்­க­வேண்­டிய நிலை. முடி­ய­வில்லை என்­றா­லும் தேவையை உணர்ந்துகொண்டு அவர் பணி­யாற்­றி­னார்.

இந்த நேரத்­தில்தான் அவ­ருக்கு ஒரு சிந்­தனை உதித்­தது. சமூ­கத்­துக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்­கும் உத­வும் வகை­யில் உடல் நல­னு­டன் இருக்­க­வேண்­டும் என்று அவர் முடி­வெ­டுத்­தார்.

வழக்­க­மாக உடற்­ப­யிற்சி செய்ய தொட­ங்கி­னார். சிர­ம­மாக இருந்­தா­லும் தொடங்­கி­யதை நடுவே விடக்­கூ­டாது என்று முடிவு செய்து உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்­குச் சென்­றார். யோகா, ஸும்பா பயிற்­சி­களில் ஈடு­பட்­டார். சாப்­பாட்­டி­லும் அதிக கவ­னம் செலுத்­தி­னார்.

வீட்­டுச் சாப்­பாடு பக்­கம் திரும்பி­னார். இவற்­றின் பல­னாக ஓரே ஆண்­டில் 15 கிலோ எடை போனது.

இப்­போது 75 கிலோ எடை­யு­டன் உடல்நல­னு­டன் சுறு­சு­றுப்­பு­டன் இருக்­கி­றார். காய்­க­றி­களை அவர் உணவில் அதிகமாக இப்போது சேர்த்­துக்­கொள்­கி­றார்.

தாதி நாடி­யா­வின் இந்த மாற்­றங்­கள் அவ­ரு­டைய குடும்­பத்­தி­லும் நல்ல தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தின.

அவ­ரு­டைய பெற்­றோ­ரும் சகோ­த­ரி­யும் நல­மான உணவை இப்­போது விரும்­பு­கி­றார்­கள்.

உடற்­ப­யிற்­சி­களில் ஈடு­பட வேண்­டும் என்று அந்­தத் தாதி தன்­னு­டைய சக­ ஊ­ழி­யர்­களையும் ஊக்­கு­வித்து வரு­கி­றார்.

வெளிநாட்டு ஊழியர் விடுதியில் பணியாற்றியதை அடுத்து தொண்டூழிய உணர்­வும் அவ­ரி­டம் இப்­போது தலை­தூக்கி இருக்­கிறது.

"உடல்­ந­ல­னு­டன் இருக்க வேண்­டும் என்ற எண்­ணம் எனக்கு ஏற்­பட்­ட­தற்குப் பொரு­ளி­யல் முடக்­கம் முக்கியமான கார­ணம்.

"உடல்­ந­ல­னு­டன் ஊக்கத்துடன் சுறுசுறுப்புடன் இருந்­தால் அன்­பர்­களுக்­கும் மற்­ற­வர்­க­ளுக்­கும் உதவ முடி­யும். வாழ்­வில் எதை­யா­வது சாதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்­பி­னால் உடனே அதற்­கான முயற்சி­க­ளைத் தொடங்­குங்­கள்.

"முயற்சி செய்­யா­மல் இருப்­பதை­விட முயற்சி செய்து தோல்வி ஏற்­பட்­டா­லும் அது சிறந்­த­து­தான்.

"வாழ்க்­கை­யில் ஒரு குறிக்­கோள் உங்­க­ளுக்கு இருந்­தால், நீங்­கள் எந்த அள­வுக்குக் களைத்துப்­போய் இருந்­தா­லும், உங்­களி­டம் ஊக்­கம் குறை­வாக இருந்­தா­லும் குறிக்கோளை நிறைவேற்றும் முயற்­சியைக் கைவி­டா­தீர்­கள்.

"இறு­தி­யில் உங்­க­ளுக்கு உடல் ­ந­ல­மும் மன­ந­ல­மும் உண்­டா­கும். இது உண்மை," என்­பதே தாதி நாடியா கூறும் ஆலோ­சனை.