துணைப் பிரதமர் ஹெங்: புத்தாக்கம் மிக அவசியம்

துணைப் பிரதமர் ஹெங்: புத்தாக்கம் மிக அவசியம்

2 mins read

இயற்கை வளங்­கள் எது­வும் இல்­லாத சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சிக்­கும் பொரு­ளி­யல் மேம்பாட்டிற்கும் நாட்­டின் சமூ­கக் கட்­ட­மைப்பை வலுப்­படுத்­த­வும் புத்­தாக்­கம் மிக­வும் அவ­சி­யம் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்துள்ளார்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தால் ஈராண்­டிற்கு ஒரு­முறை நடத்­தப்­படும் 'லீ குவான் இயூ உலகத் தொழில் திட்­டப் போட்டி'யின் வெற்றி­யா­ளர்­கள் நேற்று அறி­விக்­கப்­பட்­ட­னர்.

இறு­திச் சுற்­றுக்கு மொத்­தம் எட்­டுப் போட்­டி­யா­ளர்­கள் தேர்­வான நிலை­யில், 'ஐட்­ட­ரேட்­டிவ் ஸ்கோப்ஸ்', 'ரிலெக்ட்­ரிஃபை' எனும் இரு நிறு­வனங்­கள் தத்­தம் பிரி­வு­களில் வெற்றி­யா­ளர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டன. அவ்­விரு நிறு­வ­னங்­க­ளுக்­கும் தலா $250,000 மதிப்­பி­லான பரி­சு­கள் கிடைத்­தன.

'அறி­வார்ந்த, நீடித்து நிலைக்­கத்­தக்க, மீள்­தி­றன்­மிக்க நக­ரங்­களைக் கட்­ட­மைத்­தல்' எனும் கருப்­பொ­ரு­ளு­டன் இடம்­பெற்ற இப்­போட்டி, 60 நாடு­க­ளைச் சேர்ந்த 650 பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இருந்து 850 புத்­தாக்­கப் படைப்­பு­களை ஈர்த்­தது.

மெய்­நி­கர் முறை­யில் இடம்­பெற்ற நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு பேசிய துணைப் பிர­த­மர் ஹெங், "இந்த நூற்­றாண்­டில் ஆக மோச­மான நோய்ப் பர­வலை இப்­போது நாம் எதிர்­கொண்டு இருக்­க­லாம் என்­றா­லும், எதிர்­பா­ராத புத்­தாக்க காலத்­தில் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம். உண்­மை­யில், கொரோனா கிரு­மியை வெற்­றி­கொள்­ள­வும் அதன்­பின் வலி­மை­யாக மீண்­டெ­ழ­வும் சூழ­லுக்கு ஏற்ப மாறிக்­கொள்­ளும் திற­னும் புத்­தாக்­கத் திற­னும் மிக முக்­கி­யம்," என்­றார்.

மின்­னி­லக்­க­ம­ய­மா­த­லின் வேகத்தை கொவிட்-19 தொற்று முடுக்கி­விட்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

அடுத்த கட்ட வளர்ச்­சி­யின்­போது, புத்­தாக்­கத்­தி­லும் பங்­காளித்­து­வங்­க­ளி­லும் மிகுந்த கவ­னம் செலுத்­து­வோம் என்­றும் திரு ஹெங் சொன்­னார்.

திரு சித்­தார்த் ஜாதவ் என்­ப­வ­ரால் தொடங்­கப்­பட்ட 'பாலிபீ' எனும் தொழில்­மு­னைப்­புக் குழு­வும் இறுதிச் சுற்­றுக்­கு முன்னேறியது. உள்­ள­ரங்­கில் அதி­க­மாக வளர்க்­கப்­படும் ஸ்ட்­ரா­பெர்ரி, தக்­காளி, மிளகு, கத்­த­ரிக்­காய் போன்­ற­ செடிகளில் தானாக இயங்­கும், ஆளில்லா சிறுவானூர்­தி­களைப் பயன்­ப­டுத்தி மக­ரந்­தச் சேர்க்கை இடம்­பெ­றும் முறையை அக்­குழு உரு­வாக்கி இருக்­கிறது.

"கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட சூழ­லில் மேற்­கொள்­ளப்­படும் வேளாண்­மை­யில் உற்­பத்­தித்­தி­றனை மேம்­ப­டுத்­தும் வகை­யில் ஒரு விரி­வான, துல்­லி­ய­மான தோட்­டக்­கலை சேவையை உரு­வாக்­கு­வதே எங்­க­ளு­டைய இலக்கு," என்­றார் திரு சித்­தார்த்.