புக்கிட் மேராவில் லுத்தரன் சமூகப் பராமரிப்பு சேவைகளின் புதிய அலுவலகம் திறப்பு

புக்கிட் மேராவில் லுத்தரன் சமூகப் பராமரிப்பு சேவைகளின் புதிய அலுவலகம் திறப்பு

2 mins read
82c86b30-5c9b-4562-b811-b56b22cab08e
லுத்தரன் சமூகப் பராமரிப்பு சேவைகளின் புதிய அலுவலகத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் டெஸ்மண்ட் லீ (வலது), நூல் கொண்டு சொற்களை இணைத்து ஒரு சொற்றொடரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

லுத்­த­ரன் சமூ­கப் பரா­ம­ரிப்பு சேவை­கள் ஜாலான் புக்­கிட் மேரா­வில் நேற்று தனது புதிய அலு­வ­ல­கத்­தைத் திறந்­தது.

தேசிய வளர்ச்சி அமைச்­ச­ரும் சமூக சேவை­க­ளின் ஒருங்­கி­ணைப்­பிற்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான டெஸ்­மண்ட் லீ நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

முன்­ன­தாக, லுத்­த­ரன் சமூ­கப் பரா­ம­ரிப்பு சேவை­கள் அலு­வ­ல­கம் மெக்­பர்­சன் சாலை­யில் அமைந்­தி­ருந்­தது.

கொவிட்-19 பர­வலை அடுத்து தனது சேவை­களை மின்­னி­லக்­க­ம­ய­மாக்கி, அச்­சே­வை­கள் அலு­வ­ல­கம் தொடர்ந்து செய­லாற்றி வரு­கிறது.

அந்த லாப நோக்­க­மற்ற நிறு­வனம் தொழில்­நுட்­பத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்தி வரு­கிறது என்­பதை அதன் நிர்­வாக இயக்­கு­நர் ஜஸ்­டின் முய் பகிர்ந்­து­கொண்­டார்.

கடந்த 2018ஆம் ஆண்­டில் இருந்து அர­சாங்க நீதி­மன்­றங்­க­ளின் பங்­கா­ளித்­து­வத்­து­டன் 'புரொ­ஜெக்ட் ரிஸ்­டோர்' எனும் திட்­டத்தை அந்த அமைப்பு செயல்­ப­டுத்தி வரு­கிறது.

சமூ­கப் பூசல்­களை நீதித்­து­றைச் செயல்­மு­றை­யில் இருந்து திசை­திருப்பி, மாற்­றுச் சீர­மைப்­புச் செயல்­முறை மூலம் மக்­கள் தங்­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­மு­றை­யைச் சரி­செய்­து­கொள்­ளும்­ப­டிச் செய்­வது அத்­திட்­டத்­தின் நோக்­கம்.

காணொ­ளிக் கலந்­து­ரை­யா­டல் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்தி அத்­திட்­டம் கடந்த ஆண்­டில் இணை­யத்­தி­லும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அத்­திட்­டம் அறி­மு­க­மா­ன­தில் இருந்து, இது­வரை 24 வழக்­கு­களை லுத்­த­ரன் சமூ­கப் பரா­ம­ரிப்பு சேவை­கள் கையாண்­டுள்­ளது. அவற்­றில் ஏழு வழக்­கு­கள் நீதி­மன்­றங்­களில் இருந்து மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டன. சென்ற ஆண்­டில் மட்­டும் ஆறு வழக்­கு­கள் முடித்து வைக்­கப்­பட்­டன. அவற்­றில் இரு வழக்­கு­கள் நீதி­மன்­றங்­களில் இருந்து திரும்­பப் பெறப்­பட்­டன.

அத்­து­டன், தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய 'மெய்­நி­கர் செவி­ம­டுப்பு வட்­டம்' எனும் சேவை­யை­யும் கடந்த ஆண்டு ஏப்­ர­லில் அவ்­வ­மைப்பு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

பயிற்­சி­பெற்ற பணி­யா­ளர்­க­ளால் நடத்­தப்­படும் அந்த சேவை மூலம், ஒரு மின்­னி­லக்­கத் தளம் வாயி­லாக குடும்ப உறுப்­பி­னர்­களும் நண்­பர்­களும் தாங்­கள் எதிர்­கொள்­ளும் சிர­மங்­க­ளைப் பகி­ர­லாம்.

"புத்­தாக்­கத்­தி­லும் மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தி­லும் லுத்­த­ரன் சமூ­கப் பரா­ம­ரிப்பு சேவை­க­ளின் படைப்­பாற்­ற­லும் மீள்­தி­ற­னும் ஊக்­க­ம­ளிப்­ப­தாக உள்­ளன. கொவிட்-19 பர­வல் ஏற்­ப­டுத்­திய பல சவால்­க­ளுக்கு இடை­யி­லும் அது கரு­ணை­யு­டன் செயல்­பட்டு வரு­கிறது," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சமூக சேவைப் பணி­கள் உட்­பட பல நிலை­க­ளி­லும் கொரோனா பர­வல் சிங்­கப்­பூ­ருக்கு இடை­யூறு விளை­வித்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"இருப்­பி­னும், உதவி தேவைப்­படும் சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கைதூக்கி­வி­டு­வ­தில் சமூ­கக் குழுக்­கள், சமூக சேவை­கள், அர­சாங்க அமைப்­பு­கள், பெரு­நி­று­வ­னங்­கள், சமூ­கம் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான பங்­கா­ளித்­து­வத்­தின் ஆற்­ற­லை­யும் அது எடுத்­துக்­காட்டி இருக்­கிறது," என்று திரு டெஸ்மண்ட் லீ சொன்னார்.