முரசொலி
உலகில் விமானப் போக்குவரத்தின் முக்கியத் துவத்தை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகம் வேகமாக தொடர்புகொள்ள அதைவிட்டால் வேறு வழியில்லை.
உலக ஆகாயவெளியில் இரவு பகல் பாராமல் எந்த ஒரு நேரத்திலும் விமானங்கள் ஆயிரக்கணக்கில் பறந்தபடி கோடானுகோடி மக்களைப் பல பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கின்றன. உலகைப் பரபரப்பாக எப்போதும் வைத்திருப்பது விமானப் போக்குவரத்துத் தொழில்துறை.
விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், விமானச் சேவைகளை நடத்துவோர், பல்வேறு சேவைகளையும் வழங்குவோர் என்று அந்தத் துறையைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் 24 மணி நேரம் போதாதபடி உழைத்தும் உலகத் தேவைகளை நிறைவேற்ற போதிய நேரமும் வளங்களும் இல்லாத அளவுக்குப் பொருளியலின் மிக முக்கிய துறைக விளங்குகிறது விமானப் போக்குவரத்துத் துறை.
இப்படிப்பட்ட ஒரு துறையை கொவிட்-19 கிருமித்தொற்று தலை எடுக்க முடிதபடி முற்றிலும் முடக்கிப் போட்டுவிட்டது.
கொவிட்-19 தொற்றுக்கு முன்னதாக 2019ல் தொழில் நிமித்தமாகவும் பொழுதுபோக்கு உல்லாசத்துக்காகவும் ஏறத்தாழ ஐந்து பில்லியன் மக்கள் உலகம் முழுவதும் விமானங்களில் பயணம் செய்தார்கள். ஆனால் சென்ற ஆண்டில் 1.8 பில்லியன் மக்கள்தான் பயணங்களை மேற்கொண்டனர்.
உலக விமான நிறுவனங்களுக்குச் சென்ற ஓராண்டில் ஏற்பட்ட மொத்த இழப்பு US$370 பில்லியன் ($496 பில்லியன்). விமான நிலையங்கள் 12 மாதங்களில் மேலும் US$15 பில்லியன் வருவாயை இழந்தன. விமானச் சேவைகளை வழங்குவோருக்கு, பலவற்றையும் விநியோகிக்கும் சேவைகளை வழங்கு வோருக்கு US$13 பில்லியனுக்கும் மேற்பட்ட இழப்பு ஏற்பட்டது. வேலை இழந்தவர்கள், தொழிலை நடத்த இயலாமல் பரிதவிப்பவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் உலக நாடுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. கிருமித்தொற்றுக்கு முந்தைய நிலை திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்று கணிக்கப்படுகிறது. அதே சூழலில், விமானப் போக்குவரத்துத் துறை பழைய நிலைக்குத் திரும்பினால்தான் உலகமும் உலகப் பொருளியலும் சூடு பிடிக்கும் என்பதும் உண்மை.
அதுவும் உலக விமானப் போக்குவரத்தில் மிக முக்கியமான ஒரு மையமாகத் திகழ்கின்ற சிங்கப்பூருக்கு இது எந்த அளவுக்கு முக்கியம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சிங்கப்பூரில் விவேகமிக்க அரசும் புரிந்துணர்வுஉள்ள மக்களும் சேர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு வருவதன் காரணமாக கிருமித்தொற்று ஏற்கெனவே வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் தன்னைப் போன்ற கிருமித்தொற்றில் குறிப்பிடத்தக்க வெற்றிபெற்றுள்ள தரப்புகளுடன் தற்காலிக பயண ஏற்பாட்டைச் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்து ஹாங்காங்குடன் விமானச்சேவையைத் தொடங்க சிங்கப்பூர் திட்டமிட்டது.
ஆனால் அங்கு மீண்டும் தொற்று கூடியதால் விஷப்பரிட்சை கூடாது என்று அந்தத் திட்டத்தை சிங்கப்பூர் தள்ளி வைத்துள்ளது.
இந்த நிலையில்தான், கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி உருவாக்கப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரே ஒரு கேடயமாக இருக்கும் தடுப்பூசியைத் தனக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக, வாய்ப்பாகக் கருதி அதைப் பெறுவதற்கும் மக்களுக்குப் போடுவதற்கும் விவேகமாக, விரைவாக, உடனடிக சிங்கப்பூர் காய்களை நகர்த்தியது.
இப்போது தடுப்பூசிச் செயல்திட்டம் மிகவும் நேர்த்தின, செம்மைன, நன்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறையுடன் முன்னெடுக்கப்படுகிறது.
உலகின் பல நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நிலைமைகளை உணர்ந்துகொண்டு சரின பாதையில் நாடுகள் இப்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தி கிருமிக்கு எதிரான பாதுகாப்புக் கேடயத்தை உருவாக்குவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ள நாடுகளுடன் தற்காலிக பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்வதில் முன்னோடிகச் செயல்பட்டு, உலகிற்கு ஊக்குவிப்பாக இருக்க சிங்கப்பூர் இப்போது முயல்கிறது. இதன் தொடர்பில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலிவும் பேச்சு நடத்தி வருகின்றன. இது வெற்றி பெறுமானால் வரும் ஜூலை முதல் இரு நாட்டு மக்களும் விமானப் பயணங்களை மேற்கொள்ள வழி பிறக்கும் என்று நம்பலாம்.
சிங்கப்பூர், ஆஸ்திரேலி நாடுகளுடன், நியூசிலாந்து, தாய்லாந்து நாடுகளும் தங்கள் ஆகாய வழியை எச்சரிக்கையுடன் திறந்துவிட கொஞ்சம் கொஞ்சமாக ஆயத்தமாகி வருகின்றன.
தடுப்பூசி காரணமாக நன்னம்பிக்கை தலைதூக்கி இருக்கிறது என்றாலும் பல நாடுகளிலும் தடுப்பூசி மூலம் சமூக நோய்த்தடுப்பு ஆற்றலை உருவாக்க காலம் பிடிக்கும் என்பது உண்மை.
கொவிட்-19க்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிவில்கூட 0.5% மக்களைத்தான் தடுப்பூசி எட்டி இருக்கிறது.
மிகுந்த கட்டொழுங்குடன் கூடிய ஜப்பான், தென்கொரி போன்ற நாடுகளில் தொற்று ஒடுங்குவதாகத் தெரியவில்லை. பல்வேறு நாடுகளும் கொவிட்-19 தொற்றை ஒடுக்கிவிட்டால், ஒன்று மற்றொன்றின் செயல்திறனைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அங்கீகரிக்கும் நடைமுறையை ஏற்றுக்கொண்டால், உடனடி தொற்று பரிசோதனை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வந்தால், விமானப் பயணம் படிப்படிக அதிகமாகும் என்பதில் ஐயமில்லை.
இந்த ஆண்டு முடிவில் ஓரளவுக்கு ஊக்கம் தரும் சூழ்நிலை திரும்பும் என்று எதிர்பார்க்க இடம் இருக்கிறது. என்றாலும் கொவிட்-19 தொற்றுக்கு முன்பு இருந்த நிலை திரும்பிவிடாது என்றும் 70 விழுக்காடு அளவுக்கு விமானத் துறை இந்த ஆண்டு முடிவில் சூடுபிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் கணித்து இருக்கிறது. மக்களும் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.
உலகளவில் கொவிட்-19 இன்னமும் ஒடுங்கிவிடவில்லை என்பதைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், எல்லா எதிர்பார்ப்புகளுமே நடைமுறை சாத்தியமானவையாகவே இருக்க வேண்டும்.
அந்த எதிர்பார்ப்பு கைகூடி வரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து நாம் பொறுப்புடன் செயல்பட்டு வருவோம். தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக முக்கியமானது என்பதை உணர்ந்து, அவரவருக்கு வாய்ப்பு கிட்டும்போது அதை நாம் கெட்டி கப் பற்றிக்கொள்வோம்.

