மலேசியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கையை சிங்கப்பூர் நேற்று தொடங்கியது.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூருக்கு வரும் ஊழியர்கள் மூலம் கிருமித்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக அந்த நடவடிக்கை இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூ கூனில் எண் 13 பீனாய் செக்டரில் ஒரு கூடம் இதற்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. உட்லண்ட்சில் மேலும் ஒரு கூடம் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று வாகன ஓட்டுநர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

