சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 17 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூகத்திலும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளிலும் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
வெள்ளிக்கிழமை புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதாகவும் அவர்கள் அனை வருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 60,184.

