மனநலிவுற்றோரை அரவணைத்து முன்னேற்றுவோம்: எட்வின் டோங்

மனநலிவுற்றோரை அரவணைத்து முன்னேற்றுவோம்: எட்வின் டோங்

2 mins read
2a5e4cd0-65d4-4628-9a6d-09c0a8f732ed
உலக 'டௌன் சிண்ட்ரோம்' தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எட்வின் டோங், நூர் ஆயிஷா முகம்மது அஸ்லி என்னும் 11 வயது சிறுமிக்கு பட்டத்தில் படம் வரைந்து காட்டினார். அருகில் சிங்­கப்­பூர் 'டௌன் சிண்ட்ரோம்' சங்­கத்தின் (டிஎஸ்ஏ) தலைவர் ரத்னசபாபதி சிவானந்தம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பரந்த விரிந்த சமூ­கத்­தில் 'டௌன் சிண்ட்ரோம்' எனப்­படும் மன­ந­லி­வுற்­றோ­ரைச் சிறந்த முறை­யில் ஒருங்­கி­ணைக்க சமூ­கம் ஒன்­று­தி­ரள வேண்­டிய அவ­சி­யம் உள்­ள­தாக கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் வலி­

யு­றுத்தி உள்­ளார்.

"மன­ந­லிவு குறை­பாடு உள்­ளோரை ஆத­ரிக்­கும் பாது­காப்­பான இல்­ல­மாக சிங்­கப்­பூரை உரு­வாக்க அத்­த­கை­யோ­ருக்கு நமது துடிப்­பான பங்­கேற்பு தேவைப்­ப­டு­கிறது," என்று தெரி­வித்­துள்­ளார் இரண்­டாம் சட்ட அமைச்­ச­ரு­மான திரு டோங். உலக 'டௌன் சிண்ட்ரோம்' தினம் நேற்று கடைப்­பி­டிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் 'டவுன் சின்­ரோம்' சங்­கம் (டிஎஸ்ஏ) கொண்­டாட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. ஜங்­ஷன் 8 கடைத்தொகுதி யிலுள்ள சங்க அலு­வ­ல­கத்­தில் அரங்கேறிய முக்­கிய நிகழ்­வு­கள் இணை­யம் வழி நேர­லை­யாகக் காட்­டப்­பட்­டன.

இது தொடர்­பான இதர கொண்­டாட்ட அம்­சங்­கள் கொவிட்-19 சூழல் கார­ண­மாக மெய்­நி­கர் வடி­வில் இடம்­பெற்­றன. குரோ­மோ­சோம் 21 எனப்­படும் நிற­மியை மும்­ம­டங்­குக் கூடு­த­லா­கப் பெற்று பிறக்­கும் குழந்தை மன­ந­லி­வு­று­கிறது. அத­னைக் குறிக்­கும் வகை­யில் மார்ச் 21ஆம் தேதி உலக 'டௌன் சிண்ட் ரோம்' கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது. இந்­தக் கூடு­தல் நிறமி 21 மூளை வளர்ச்­சி­யில் தாம­தத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. 800 பேரில் ஒரு­வ­ருக்கு இந்­தக் குறை­பாடு இருக்­கும். சிங்­கப்­பூ­ரில் 2006ஆம் ஆண்டு முதல் 'டௌன் சிண்ட்ரோம்' தினம் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கிறது.

இப்­போது 16வது ஆண்­டாக நடை­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்­றுப் பேசிய அமைச்­சர் டோங், மன­ந­லி­வுற்­ற­வர்­கள் எதிர்­நோக்­கும் சவால்­

க­ளை­ மற்­ற­வர்­கள் புரிந்­து­கொள்­ளும் வகை­யில் அது தொடர்­பான அனு­ப­வங்­க­ளை­யும் தக­வல்­க­ளை­யும் பகிர்ந்துகொண்டு உத­வு­மாறு கேட்­டுக்­கொண்­டார். சமூ­கத்­தில் மன­ந­லி­வுற்­ற­வர்­களை அங்­கீ­க­ரித்து அவர்­க­ளைக் கொண்­டா­டு­வ­தற்­கான குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கை­களில் சிங்­கப்­பூர் ஈடு­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

டிஎஸ்ஏ தலை­வர் ரத்­ன­ச­பா­பதி சிவா­னந்­தம் கூறு­கை­யில், "சிறப்­புத் தேவை­யுள்­ளோரை அர­வ­ணைக்­கும் சமூ­க­மாக சிங்­கப்­பூர் ஆகி­விட்­ட­தைத் தொடர்ந்து நமது மன­

ந­லி­வுற்ற உறுப்­பி­னர்­கள் பல­ரின் திறன்­களை வளர்ப்­ப­தற்­கான ஊக்­கம் கிடைத்து உள்­ளது," என்­றார்.