குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் சூழல் வரும்: வோங்

குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் சூழல் வரும்: வோங்

1 mins read

மாண­வர்­க­ளுக்­கும் விரை­வில் தடுப்­பூசி போடக்­கூ­டிய சூழல் ஏற்­ப­டக்­கூ­டும் என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து உள்­ளார்.

தற்­போது அர­சாங்­கத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கொவிட்-19 தடுப்­பூ­சியை 16 வய­தி­ன­ரும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ரும் போட்­டுக்­கொள்ள அனு­ம­திக்­கப்­

ப­டு­கி­றார்­கள் என்­றார் அவர்.

"ஆயி­னும், குழந்­தை­க­ளுக்­கும் தடுப்­பூசி செலுத்­து­வது குறித்த ஆய்­வுக்­கூடப் பரி­சோ­த­னை­கள் உல­க­ள­வில் நடை­பெ­று­கின்­றன. அதன் ஆற்­ற­லை­யும் பாது­காப்­புத் தன்­மை­யை­யும் சிங்­கப்­பூர் உற்­று­நோக்கி வரு­கிறது," என்று சமூக ஊட­கத்­தில் பதி­வேற்­றம் செய்த காணொளி ஒன்­றில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"சிங்­கப்­பூ­ரில் உள்ள குழந்­தை­களும் தடுப்­பூ­சி­யின் பய­னைப் பெறும் வகை­யில் அதற்­கான அனு­ம­தியை வழங்­கும் நாள் வெகு­தொ­லை­வில் இல்லை என்று கருது­கி­றேன்," என அவர் குறிப்­பிட்­டுள்­ளார். 'ஆஸ்க் மீ எனி­திங்' என்­னும் கேள்வி பதில் அங்­கத்­தில் சமூக ஊட­கத்­தி­னர் எழுப்­பிய வினாக்­க­ளுக்கு அவர் பதி­ல­ளித்­தார்.