இளையர்களின் சமயத் தீவிரவாதப் போக்கை பெற்றோர் தடுக்க இயலும்

இளையர்களின் சமயத் தீவிரவாதப் போக்கை பெற்றோர் தடுக்க இயலும்

2 mins read

சம­யத் தீவி­ர­வாத சிந்­தனை இளை­யர்­க­ளி­டம் ஏற்­ப­டா­மல் தடுப்­ப­தில் பெற்­றோர்­கள் முக்­கிய பங்கு வகிக்கமுடி­யும். வீட்­டில் பிள்­ளை­க­ளின் நடத்­தை­யில் ஏற்­படும் மாற்­றங்­க­ளைக் கவ­னிப்­ப­தன் மூல­மும் மனம்­விட்­டுப் பேசு­வதை வளர்ப்­ப­தன் மூல­மும் பெற்­றோர்­கள் இத­னைச் செய்ய முடியும்.

இது­போன்ற ஆலோ­ச­னை­கள் நேற்று நடந்த பிள்­ளை­வ­ளர்ப்பு கருத்­த­ரங்­கில் வெளிப்­பட்­டன.

வடக்கு பள்­ளி­வா­சல் குழு­மம் ஏற்­பாடு செய்த கருத்­த­ரங்­கில் பங்­கேற்ற நிபு­ணர்­கள் இது­போன்ற பரிந்­து­ரை­களை அளித்­த­னர்.

இளை­யர்­க­ளி­டம் நல்­லி­ணக்­கத்தை வளர்த்­தல் என்­னும் பொரு­ளில் இணை­யம் வழி­யாக இந்­

நி­கழ்வு நடத்­தப்­பட்­டது.

சம­யத் தீவி­ர­வா­தப் போக்­கின் அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றிந்து அவற்றை முன்­கூட்­டியே தடுக்­கும் வழி­கள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை பெற்­றோர்­க­ளி­ட­மும் இளை­யர்­க­ளி­ட­மும் ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் கருத்­த­ரங்கு நடத்­தப்­பட்­டது.

உட்­லண்ட்­ஸிலுள்ள யூசோஃப் இஷாக் பள்­ளி­வா­சல், செம்­ப­வாங்­கில் உள்ள அசை­யஃபா பள்­ளி­வா­சல் ஆகி­ய­ன­வும் நிகழ்ச்சி ஏற்­பாடு செய்த பள்­ளி­வா­சல் குழு­மத்­தில் அடங்­கும்.

இவ்­வி­ரண்டு பள்­ளி­வா­சல்­க­ளை­யும் தாக்­கும் இலக்கு கொண்­டி­ருந்­த­தாக 16 வயது இளை­யர் ஒரு­வர் சில மாதங்­க­ளுக்கு முன் தடுத்து வைக்­கப்­பட்­டார்.

கருத்­த­ரங்­கில் கேள்வி பதில் அங்­க­மும் இடம்­பெற்­றது.

தங்­க­ளது உணர்­வு­பூர்­வ­மான தக­வல்­களைப் பிள்­ளை­க­ளி­டம் பெற்­றோர் எவ்­வாறு விவா­திக்க முடி­யும், தவ­றான செயல்­க­ளி­லும் இணை­யத்­தில் சம­யத் தீவி­ர­வா­தத் தக­வல்­க­ளைப் பெறு­வ­தி­லும் பிள்­ளை­கள் ஈடு­ப­ட­வில்லை என்­பதை அறி­வது எவ்­வாறு - என்­பன போன்ற கேள்­வி­கள் முன்­வைக்­கப்­பட்­டன.

"இளை­யர்­க­ளின் கவ­லை­க­ளைக் கவ­னிக்க நீங்­கள் நேரத்தை ஒதுக்க வேண்­டும். பொதுப் போக்கு­வ­ரத்­தில் செல்­லும்­போது, காரில் பய­ணம் செய்­யும்­போது, தொலைக்­காட்சி பார்க்­கும்­போது, சாப்­பி­டும்­போது என்று நேரத்தை ஒதுக்கி அவர்­க­ளைக் கவ­னிக்க வேண்­டும். வாய் வார்த்தை மட்­டுமே தொடர்­பு­மு­றை­யாக அமை­யாது. செய்­கை­க­ளை­யும் கவ­னிக்க வேண்­டும்," என நிபு­ணர்­கள் ஆலோ­சனை வழங்­கி­னர்.