சிறை சென்றோரின் பிள்ளையும் குற்றம் புரிய வாய்ப்பு

சிறை சென்றோரின் பிள்ளையும் குற்றம் புரிய வாய்ப்பு

2 mins read

குற்­றச்­செ­யல்­க­ளுக்­காக சிறைத் தண்­டனை பெற்­ற­வர்­க­ளின் பிள்­ளை­களும் சட்­டப் பிரச்­சி­னை­யில் சிக்­கும் வாய்ப்பு இருக்­கக்­கூ­டும் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது. 'சிங்­கப்­பூ­ரில் தலை­மு­றை­

க­ளுக்கு இடை­யி­லான குற்­றப் பர­வ­லைப் புரிந்­து­கொள்­ளு­தல்' என்­னும் தலைப்­பி­லான அந்த ஆய்வு சுமார் 94,000 பெற்­றோர்­க­ளி­ட­மும் அவர்­க­ளின் 183,000 குழந்­தை­க­ளி­ட­மும் நடத்­தப்­பட்­டது.

சிறைத் தண்­டனை பெற்­ற­வர்­

க­ளின் பிள்­ளை­கள் குற்­றம் புரிந்து சிறை செல்­வ­தற்­கான வாய்ப்பு தண்­டனை பெறா­த­வர்­க­ளின் பிள்­ளை­க­ளைக் காட்­டி­லும் மூன்று மடங்கு அதி­கம் என்­கிறது ஆய்வு.

அதாவது, தந்தை தண்­டனை பெற்­றி­ருந்­தால் அவ­ரது பிள்ளை சிறை செல்­லும் வாய்ப்பு 2.7 விழுக்­கா­டும் தாய் தண்­டனை பெற்­றி­ருந்­தால் அவ­ரது பிள்ளை சிறை செல்­லும் வாய்ப்பு 3.7 விழுக்­கா­டும் அதி­கம் இருப்­ப­து தெரிய வந்­தது.

ஆய்­வில் பங்­கேற்ற தந்­தை­மார்­களில் ஐவ­ரில் ஒரு­வ­ரும் தாய்­மார்­களில் 20ல் ஒரு­வ­ரும் அவர்­கள் புரிந்த குற்­றங்­க­ளுக்­காக சிறைத் தண்­டனை அனு­ப­வித்­த­வர்­கள். மேலும், மூன்­றில் இரு பெற்­றோர்­கள் இரண்டு அல்­லது அதற்­கும் அதி­க­மான குற்­றச்­செ­யல்­கள் புரிந்­த­வர்­கள். ஆய்­வில் பங்­கேற்ற பிள்­ளை­களில் 2 விழுக்­காடு குற்­றப் பின்­னணி உடை­ய­வர்­கள் என்­ப­தும் தெரிய வந்­தது. சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் சமூக சேவைக்­கான தேசிய மன்­ற­மும் இணைந்து மேற்­கொண்ட இந்த ஆய்வு இது­வரை இல்­லாத அள­வுக்கு அதி­கமானோரிடம் விரி­வான முறை­யில் நடத்­தப்­பட்­ட­தாக அமைச்­சின் பேச்­சா­ளர் 'சண்டே டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார். ஆய்­வில் பங்­கேற்ற பெற்­றோர்­கள் 1965, 1970. 1975, 1980, 1985 ஆகிய ஆண்­டு­களில் பிறந்­த­வர்­கள். அவர்­களில் 41,683 பேர் தந்­தை­யர்; 52,146 பேர் அன்­னை­யர். அதே­போல ஆய்­வில் கருத்­துக் கூறிய குழந்­தை­க­ளின் வயது கடந்த ஆண்டு நில­வ­ரப்­படி 7க்கும் 39க்கும் இடைப்­பட்­டி­ருந்­தது.

சிங்­கப்­பூ­ரில் பெற்­றோ­ரின் குற்­றச் செயல்­பாடு அவர்­க­ளின் குற்­றச் செயல்­பாட்­டில் எவ்­வ­கை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது என்­ப­தைப் புரிந்­து­கொள்­வ­தற்­கா­கவே ஆய்வு நடத்­தப்­பட்­ட­தாக அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.