சிங்கப்பூர் பாடல் பதிப்புரிமை: பின்வாங்கிய இசையமைப்பாளர்

சிங்கப்பூர் பாடல் பதிப்புரிமை: பின்வாங்கிய இசையமைப்பாளர்

2 mins read

'கவுண்ட் ஆன் மி சிங்­கப்­பூர்' என்­னும் சிங்­கப்­பூர் தேசிய தினப் பாடல் தொடர்­பான பதிப்­பு­ரிமை விவ­கா­ரத்­தில் எதிர்­பாரா திருப்­பம் நிகழ்ந்­துள்­ளது. அந்­தப் பாட­லின் சாய­லில் 'வி கேன் அச்­சீவ்' என்ற பெய­ரில் ஒரு பாடலை இசை­ய­மைத்­துப் பயன்­ப­டுத்தி வந்த ஜோசஃப் மெண்­டோசா (படம்) என்­னும் இந்­தி­யா­வின் இசை­ய­மைப்­பா­ளர் பாட­லுக்கு உரிமை கொண்­டா­டும் முடி­வில் இருந்து பின்­வாங்கி உள்­ள­தாக கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்சு நேற்று தனது ஃபேஸ்புக்கில் குறிப்­பிட்­டது.

'கவுண்ட் ஆன் மி சிங்­கப்­பூர்' பாட­லும் 'வி கேன் அச்­சீவ்' பாட­லும் ஏறக்­குறைய ஒரே மாதி­ரி­யாக ஒலித்­தது. பாடல்­களில் சிங்­கப்­பூ­ருக்­குப் பதி­லாக 'இந்­தியா' அல்­லது 'மதர் இந்­தியா' என்ற வார்த்தை மட்­டும் மாறி இருக்­கிறது.

இதனை அறிந்­த­தும் விசா­ர­ணை­யில் இறங்­கி­யது அமைச்சு. ஆனால், சிங்­கப்­பூர் பாடல் பற்றி ஒரு­சில நாட்­க­ளுக்கு முன்­னர்­தான் தமக்­குத் தெரி­யும் என்­றும் தமது பாடல் 1983ல் எழு­தப்­பட்­டது என்­றும் அதற்­கான ஆதா­ரம் தம்­மி­டம் இருப்­ப­தா­க­வும் திரு மெண்­டோசா கூறி வந்­தார்.

இருப்­பி­னும் 'வி கேன் அச்­சீவ்' என்­னும் அவ­ரது பாட­லின் உரி­மையை வைத்­தி­ருக்­கும் 'பாவ்­லின் இந்­தியா' என்­னும் கிறிஸ்­துவ இசை நிறு­வ­னம் அந்­தப் பாடல் சிங்­கப்­பூ­ரின் தேசிய கீதத்­தின் தழு­வல்­தான் என ஒப்­புக்­கொண்­டு­விட்­ட­தாக அண்­மை­யில் அமைச்சு கூறி இருந்­தது. இதற்­குப் பின்­ன­ரும் தொடர்ந்து முரண்­டு­பி­டித்து வந்த திரு மெண்­டோசா தற்­போது அந்­தப் பாடல் தம்­மு­டை­ய­து­தான் என்­ப­தற்­கான ஆதா­ரம் இல்லை என்று கூறி உள்­ளார். எனவே, 'கவுண்ட் ஆன் மி சிங்­கப்­பூர்' பாட­லின் வரி­க­ளுக்கோ இசைக்கோ தாம் உரிமை கொண்­டா­டப்­போ­வ­தில்லை என அவர் கூறி­விட்டதாக அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.

"எந்த ஒரு நிபந்­த­னை­யு­மின்றி உரிமை கோரலை திரு மெண்­டோசா மீட்­டுக்­கொண்­டு­விட்­டார். மேலும் 'வி கேன் அச்­சீவ்' பாடலை எல்லா சமூக ஊட­கத் தளங்­களில் இருந்­தும் நீக்­கி­விட அவ­ரது உதவி­ யா­ளர்­க­ளுக்­கு அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்," என அமைச்­சின் பதிவு குறிப்­பிட்­டுள்­ளது.