சைக்கிளோட்டி மரணம்; ஓட்டுநர் கைது

சைக்கிளோட்டி மரணம்; ஓட்டுநர் கைது

1 mins read

லோயாங் அவென்­யூ­வில் பேருந்து ஒன்­றின் அடி­யில் மாட்­டிக்­கொண்ட 31 வயது சைக்­கி­ளோட்டி உயி­ரி­ழந்­தார். வெள்­ளிக்­கி­ழமை பின்­னே­ரத்­தில் நிகழ்ந்த இந்த சாலை விபத்­தின் தொடர்­பில் 63 வயது பேருந்து ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். மர­ணம் விளை­விக்­கும் அள­வுக்­குக் கவ­னக்­கு­றை­வாக வாக­னம் ஓட்­டி­ய­தற்­காக அவர் கைது செய்­யப்­பட்­ட­தாக போலிஸ் கூறி­யது.

லோயாங் அவென்யூ-பாசிர் ரிஸ் டிரைவ் 1 சந்­திப்­பில் நிகழ்ந்த விபத்து குறித்து இரவு 10.40 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.