12 வெளிநாட்டு தொற்று; ஒரு வாரமாக சமூகத்தொற்று இல்லை

12 வெளிநாட்டு தொற்று; ஒரு வாரமாக சமூகத்தொற்று இல்லை

1 mins read

60,000 பேர் முழுமையாக குணமடைந்தனர்

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 12 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­கள் அனை­வ­ரும் வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள். இவர்­க­ளை­யும் சேர்த்து இங்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 60,196.

அதே நேரம் 60,007 பேர் தொற்­றில் இருந்து முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­தாக சுகா­தார அமைச்சு சனிக்­கி­ழமை இரவு தெரி­வித்­தது. அன்­றைய தினத்­தில் மட்­டும் மூவர் குண­ம­டைந்­த­தாக அறி­விக்­கப்­பட்­ட­னர். மருத்­து­வ­ம­னை­களில் 17 பேரும் சமூக வசிப்­பி­டங்­களில் 115 பேரும் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் எவ­ரும் இல்லை. சனிக்­

கி­ழமை தொற்று உறுதி செய்­யப்­பட்ட 17 பேரும் இந்­தியா, மியன்­மார், ரோமா­னியா, பங்­ளா­தேஷ், இந்­தோ­னீ­சியா, மலே­சியா, பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள். அவர்­களில் இரு வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­களும் அடங்­கு­வர்.

கடந்த வாரம் முழு­வ­தும் சமூக அள­வில் யாருக்­கும் கிருமித் தொற்று ஏற்­ப­ட­வில்லை. அதற்கு முந்­திய வாரத்­தில் இரு­வ­ருக்கு உறுதி செய்­யப்­பட்­டது.