$93 மில்லியன் மின்னிலக்கப் படைப்பை வாங்கிய விக்னேஷ் வீடு, கார் இல்லாத சிங்கப்பூர் தொழில்முனைவர்

$93 மில்லியன் மின்னிலக்கப் படைப்பை வாங்கிய விக்னேஷ் வீடு, கார் இல்லாத சிங்கப்பூர் தொழில்முனைவர்

2 mins read
31f27767-2937-45b3-83e8-76c5f3a7bdd1
-

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் தொழில்­

மு­னை­வ­ரான விக்­னேஷ் சுந்­த­ரே­சன் (படம்) தற்­போது செய்­தி­களில் இடம்­பி­டித்து வரு­கி­றார். அண்­மை­யில் 'எவ்­ரி­டேய்ஸ்: த ஃபர்ஸ்ட் 5,000 டேய்ஸ்' என்­னும் அரிய கலைப்­ப­டைப்பை $69 மில்­லி­யன் (S$93 மில்­லி­யன்) மின்­னி­லக்க நாண­யத்­தைப் பயன்­ப­டுத்தி வாங்­கி­யது முதல் அவர் அதிகம் பேசப்பட்டு வரு­கி­றார்.

'பீபல்' என்று அழைக்­கப்­படும் மைக் விங்­கிள்­மன் என்­னும் கலை­ஞ­ரால் உரு­வாக்­கப்­பட்ட மெரு­குத்­த­ளம் போன்­ற­தொரு மெய்­நி­கர் புகைப்­ப­டத்­தொ­குப்பு மார்ச் 11ஆம் தேதி நடை­பெற்ற கிறிஸ்டீ'ஸ் ஏலத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதனை மெட்­டா­கோ­வன் என்­ப­வர் ஏலத்­தில் எடுத்­த­தா­கத் தக­வல் பர­வி­யது.

ஆனால் அது புனைபெ­யர் என்­ப­தும் விக்­னேஷ் சுந்­த­ரே­சன்­தான் மெட்­டா­கோ­வன் என்­ப­தும் கடந்த வியா­ழக்­கி­ழமை தெரிய வந்­தது. 'சப்ஸ்­டேக்' இணை­யத்­த­ளத்­தில் அவரே தமது அடை­யாளத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்.

தமிழ்­நாட்­டைச் சேர்ந்த திரு விக்­னேஷ், 32, தமது பெய­ரில் வீடோ காரோ இல்லை என்­றும் தாம் ஒரு சாதா­ரண ஆள் என்­றும் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் தெரி­வித்­துள்­ளார். டுவிட்­ட­ரில் மெட்­டா­கோ­வனை 20,000 பேர் பின்­தொ­ட­ரு­கி­றார்­கள்.

லிட்­டில் இந்­தியா அரு­கில் கொண்­டோ­மி­னிய வீடு ஒன்­றில் தங்கி இருக்­கும் அவர், 'போர்ட்கீ டெக்­னா­ல­ஜிஸ்' என்­னும் சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக் கொண்ட தக­வல் தொழில்­நுட்ப ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஆவார்.

மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்பு சிங்­கப்­பூ­ரில் குடி­யே­றிய இவ­ரும் ஆனந்த் வெங்­க­டேஷ்­வ­ரன் என்­ப­வ­ரும் இணைந்து மெட்­டா­பர்ஸ் என்­னும் உல­கின் பெரிய 'என்­எ­ஃப்டி ஃபண்ட்' நிறு­வ­னத்தை நடத்தி வரு­கின்­ற­னர்.

பத்­தாண்­டு­க­ளுக்கு முன்பு இந்­தி­யா­வில் 'த இந்து' நாளி­த­ழின் தொழில்­நுட்ப ஆலோ­ச­க­ராக திரு விக்­னே­ஷும் பத்­தி­ரி­கை­யா­ள­ராக திரு ஆனந்­தும் பணி­பு­ரிந்­த­னர். 2018க்கு முன்பு வரை தாம் கன­டா­வில் இருந்­த­தாக திரு விக்­னேஷ் குறிப்­பிட்­டார்.

2013ஆம் ஆண்டு சென்னையில் இருந்தபோது முதன்­மு­த­லாக மின்­னி­லக்க நாண­யத்­தைச் சம்­பா­திப்­

ப­தற்­கான வழி­களை தாம் தேடி­யதை அறிந்த தமது தாயார், "உருப்­ப­டி­யாக ஏதா­வது செய்து முன்­னே­றப் பார்," என்று கூறி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.