செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

உணவுத் தேவைக்கு நன்கொடை நாடுகிறது ஜாமியா சிங்கப்பூர்

கொவிட்-19 கொள்­ளை­நோய் கார­ண­மாக வரு­மா­னம் பாதிக்­கப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் இருந்து வரும் உணவு விநி­யோ­கக் கோரிக்­கை­கள் அதி­க­ரித்­துள்­ளன. அத­னைத் தொடர்ந்து அவர்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்­காக ஜாமியா சிங்­கப்­பூ­ரின் உணவு வங்­கி­யில் சேமித்து வைக்­கப்­பட்ட உண­வுப் பொருட்­க­ளின் இருப்பு குறைந்து வரு­கிறது. அதனைத் தொடர்ந்து நன்கொடை உதவி நாடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இணையம் வழியாக நன்கொடை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண­வுப் பங்­கீட்டு உதவி கேட்டு அந்த உணவு வங்­கியை கடந்த டிசம்­பர் மாதம் 886 குடும்­பங்­கள் அணு­கின. ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் அது 79 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருந்­தது. அந்த எண்­ணிக்கை கடந்த மாதம் 920 ஆக அதி­க­ரித்­து­விட்­டது. பொரு­ளி­யல் மீட்பு நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்று வந்­தா­லும் இந்த ஆண்டு மேலும் பல குடும்­பங்­கள் உதவி கேட்டு தங்­களை அணு­கக்­கூ­டும் என்று ஜாமியா சிங்­கப்­பூ­ரின் தலைமை செயல்­பாட்டு அதி­கா­ரி­யும் தலை­மைச் செய­லா­ள­ரு­மான திரு ஜாஃபர் மைதீன் கூறி­னார்.

ஓட்டுநர் தடுப்பூசிக்கு வரவேற்பு

மலே­சிய சரக்கு வாகன ஓட்­டு­நர்­கள் சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூ­சிக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாக வர்த்­தக தொழில் அமைச்சு நேற்று கூறி­யது. மலே­சிய ஓட்­டு­நர்­களும் அவர்­க­ளோடு இருப்­போ­ரும் நேற்று முன்­தி­னம் முதல் சிங்­கப்­பூ­ரில் ஃபைசர்­ப­யோ­என்­டெக் தடுப்­பூ­சி­யைப் பெற்று வரு­கின்­ற­னர். இதற்­காக பூன் லே, உட்­லண்ட்ஸ் ஆகிய இரு மையங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன. சோத­னைச் சாவ­டி­க­ளின் அரு­கில் இவை அமைந்­துள்­ளன. தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சரக்கு வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு அந்த மையங்­களில் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. தடுப்­பூசி போடாத ஓட்­டு­நர்­களும் சிங்­கப்­பூ­ருக்­குள் அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள். அவர்­கள் கொவிட்-19 தொடர்­பான இதர எல்லை சுகா­தார நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்­ற­வேண்­டும்.