சிறந்த சேவையாளருக்கு வானமே எல்லை

சிறந்த சேவையாளருக்கு வானமே எல்லை

3 mins read
475f2862-e7f5-4d55-99c4-da46de3a28ca
சிங்கப்பூரின் சிறந்த வரவேற்பாளர் விருதுடன் திருமதி சு.வித்யபாரதி. படம்: மரினா பே சேண்ட்ஸ் -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

சிறந்த பேச்­சாற்­றல் உடைய சு.வித்­ய­பா­ர­தி­யி­டம் திற­மைக்கு ஏற்ற வேலையை தேடு­மாறு இவ­ரது தாயார் அடிக்­கடி அறி­வு­றுத்­து­வார்.

தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யி­லும் ஜேம்ஸ் குக் பல்கலைக்­க­ழ­கத்­தி­லும் சுற்­று­லாத் துறை­யில் மேற்­ப­டிப்பை முடித்­து­விட்டு, ஓராண்­டு­கா­லம் விளம்­ப­ரப் பணி­யில் ஈடு­பட்­டார் வித்­ய­பா­ரதி. ஆனால் அந்த வேலை இவ­ருக்­குப் பிடிக்­க­வில்லை.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வனத்­தில் விமா­னச் சிப்­பந்­தி­யாக பணி­யாற்­றும் தமது உற­வி­ன­ரைப்­போல தாமும் சேவைத் துறை­யில் சேர வேண்­டும் என்ற ஆசை இவ­ருக்கு ஏற்­பட்­டது. கடந்த 2018ஆம் ஆண்­டில் மரினா பே சேண்ட்ஸ் நட்­சத்­திர ஹோட்­ட­லில் வாடிக்கையா­ளர் சேவை அதி­கா­ரி­யாக இவர் பணி­யில் சேர்ந்­தார்.

"இத்­து­றை­யில் சேர்ந்­த­போது பழைய வேலை­யைக் காட்­டி­லும் சம்­ப­ளம் சற்று குறை­வாக இருந்­தா­லும் புதிய வேலை அனு­ப­வத்­தைப் பெற வேண்­டும் என்­ப­தில் நான் உறு­தி­யாக இருந்­தேன்," என்று தெரி­வித்­தார் திரு­மதி வித்­ய­பா­ரதி, 27.

ஹோட்­ட­லுக்கு வந்­து­போ­கும் வாடிக்கையா­ளர்க­ளின் விவ­ரங்­களைப் பதி­வு­செய்­வ­தும் அவர்­களுக்கு தேவை­யான உதவி புரி­வ­தற்கு வழி­காட்­டு­வ­தும் இவ­ரது பணி­களில் அடங்­கும். பணி­யில் இவர் காட்­டிய பேரார்­வத்­தின் விளை­வாக ஓராண்­டி­லேயே இவ­ருக்கு பதவி உயர்­வும் கிடைத்­தது.

ஹோட்­ட­லுக்கு வரும் விருந்­தி­னர்­க­ளுக்கு தலை­சி­றந்த சேவை­யைத் தாம் வழங்க வேண்­டும் என்­ப­தில் வித்­ய­பா­ர­திக்கு மிகுந்த ஈடு­பாடு உண்டு.

ஒரு­முறை ஹோட்­ட­லில் தங்க வந்த ஐரோப்­பா­வைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்­ப­தி­யி­னர், கட­வுச்­சீட்டு­கள் தங்­க­ளி­டம் இல்லை என்­பதை அறிந்து பத­றி­விட்­ட­னர்.

நிலை­மை­யைப் புரிந்து அவர்­களை முத­லில் ஹோட்­ட­லின் ஓய்­வி­டத்­திற்கு அழைத்­துச் சென்று அவர்­க­ளுக்கு குளிர்­பா­னம் வழங்கி, மனதை அமை­திப்­ப­டுத்த உத­வி­னார் வித்­ய­பா­ரதி.

அதன் பிறகு அவர்­கள் இது­வரை சென்ற இடங்­க­ளின் விவ­ரங்­களை வித்­ய­பா­ரதி கேட்­ட­றிந்­தார். மரினா பே சேண்ட்ஸ் ஹோட்­ட­லுக்கு வரு­வ­தற்கு முன் அந்­தத் தம்­பதி அரு­கி­லி­ருந்த மற்­றொரு ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருந்த விவ­ரம் கிடைத்­த­தைத் தொடர்ந்து அந்த ஹோட்­டலை வித்­ய­பா­ரதி தொலை­பேசி வழி தொடர்­பு­கொண்­டார்.

அந்­தத் தம்­ப­தி­யின் கட­வுச்­சீட்டு­கள் அந்த ஹோட்­ட­லின் பாது­காப்பு பெட்­ட­கத்­தில்­தான் உள்­ளன என்பது தெரி­ய­வந்­த­வு­டன் முத­லில் அவர்­களுக்கு ஹோட்­ட­லில் அறை ஒன்றை ஒதுக்க வித்­ய­பா­ரதி ஏற்­பாடு செய்­தார்.

அதன் பிறகு அந்த ஹோட்­ட­லுக்கு இவர் சென்று, அத்­தம்­ப­தி­யின் சார்­பில் அவர்­க­ளது கட­வுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொண்டு வந்து நேர­டி­யாக ஹோட்­டல் அறை­யில் அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தார்.

மற்­ற­வர்­க­ளுக்கு உத­வும் மனப்­பான்­மையை வெளிக்­காட்­டி­ய­தோடு தங்­க­ளது பிரச்­சி­னை­யைப் பக்­கு­வமாக தீர்த்­து­வைத்த வித்­ய­பா­ர­திக்கு அத்­தம்­பதி பாராட்டு மழை பொழிந்­த­னர்.

தலை­சி­றந்த சேவையை வழங்­கும் வித்­ய­பா­ர­தியை 'சிங்­கப்­பூ­ரின் சிறந்த வர­வேற்­பா­ளர்' விரு­துக்கு மரினா பே சேண்ட்ஸ் ஹோட்­டல் முன்­மொ­ழிந்­தது.

இந்த விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்ட 33 பேரை முந்தி 2020ஆம் ஆண்­டின் சிறந்த வர­வேற்­பா­ளர் விருதை அண்­மை­யில் வென்ற வித்­ய­பா­ரதி, அடுத்த மாதம் நடை­பெ­ற­வி­ருக்­கும் 'டேவிட் கேம்­பல் கோப்பை' எனும் உல­க­ளா­விய சிறந்த வர­வேற்­பா­ளர் போட்­டிக்கு தம்மை தயார்ப்­ப­டுத்தி வரு­கி­றார்.

ஹோட்­ட­லில் புதி­தா­கச் சேரும் ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி வழங்­கி­ வ­ரும் இவர், எதிர்­கா­லத்­தில் நிர்­வா­கப் பத­விக்கு உயர்­வதை இலக்­கா­கக் கொண்­டுள்­ளார்.

கடின உழைப்­பும் செய்­யும் வேலையைச் சிறப்­பாக செய்ய வேண்­டும் என்ற உத்­வே­க­மும் இவ­ரது பணிக்கு உதவி வருகின்றன.