தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், சமரசத் தீர்வு சேவைகளுக்கான அனைத்துலக வர்த்தகச் சபை நிர்வாக அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த நிர்வாக அமைப்பு, அனைத்துலக வர்த்தகச் சபையின் மேலாண்மை சபைக் குழுவாகும், அது, அனைத்துலக வர்த்தகச் சபையும் சமரசத் தீர்வு சேவை களும் நம்பத்தகுந்தவையாக, காலத்துக்குப் பொருத்த மானவையாக இருப்பதை உறுதிப்படுத்த உதவும். அதன் புதிய உறுப்பினராக இரண்டு ஆண்டு காலத்திற்கு திரு மேனன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, ஆசியாவில் பயனீட்டாளர்களுக்குச் சமரசத் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு வழிகளைப் புதிய உறுப்பினர்கள் அதிகப்படுத்துவார்கள் என்று அனைத்துலக வர்த்தகச் சபை நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. பயனீட்டாளர்களின் தேவைகள், கொவிட்-19 சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சேவைகள் மின்னிலக்கமயமாகவும் புதிய உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று அந்த அறிக்கை தெரிவித்தது. இதனிடையே, அனைத்துலக வர்த்தகச் சபையின் அனைத்துலக சமரச நீதிமன்றத்தின் தலைவர் அலெக்ஸ் மோர்ரி, புதிய உறுப்பினர்களை வரவேற்றார். "சமரசத் தீர்வு சேவைத்தொழில் துறையில் மிகவும் பிரபலமானவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்று இருக்கிறார்கள். இது அனைத்துலக சமரச நீதிமன்றத் திற்குப் பெருமையாக இருக்கிறது,'' என்றார் அவர்.
உலக சமரச அமைப்புக்கு தலைமை நீதிபதி நியமனம்
1 mins read
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

