செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
0e0b667c-e73e-4c99-99ef-440ff25e6823
-

ஏப்ரல் 5ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம்

அடுத்த மாதம் (ஏப்ரல்) 5ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று தெரிவித்தார்.

முஸ்லிம் ஜோடிகளை மண வாழ்க்கைக்கு தயார்ப்படுத்தும் புதிய ஈராண்டுத் திட்டம்

மண வாழ்க்கைக்கு முஸ்லிம் ஜோடிகளைத் தயார்ப்படுத்தும் புதிய ஈராண்டுத் திட்டத்தில் இப்போது புதிய அம்சங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் சேரும் முஸ்லிம் ஜோடிகளுக்குப் புரிந்துணர்வுமிக்க மண வாழ்க்கை, மகப்பேறு, பெற்றோர்

ஆகுதல் ஆகிய அம்சங்களில் முஸ்லிம் திருமணப் பதி வாளர், கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் ஆகியோர் வழிகாட்டுவார்கள்.

இத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப் பட்டதிலிருந்து 84 ஜோடிகள் இதில் சேர்ந்துள்ளனர். தெமாசெக் அறநிறுவனம், கேகே மகளிர், சிறார் மருத்துவ மனை, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) ஆகியவை கூட்டாக இத்திட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.

2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'பெர்சாமாமு' (உன்னுடன் நான்) எனும் திட்டத்தில் முஸ்லிம் திருமணப் பதிவாளர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு புதுமண ஜோடி களுக்கு மணவாழ்க்கை தொடர்பான ஆலோசனை வழங்கு வார். அதன் விரிவாக்கமே இந்தப் புதிய திட்டம் என்று விளக்கப்பட்டது.

புதுமணத் தம்பதிகளுக்கு மதியுரை வழங்கும் முஸ்லிம் திருமணப் பதிவாளர்களுக்கு கேகே மருத்துவமனையும் முயிசும் இணைந்து மனநலச் சுகாதாரம், பெற்றோர் பங்களிப்பு, ஜோடிகள் ஈடுபாட்டு உத்திகள் போன்றவற்றில் பயிற்சிகளை வழங்குகின்றன.

"இத்திட்டம் புதுமணத் தம்பதிகளுக்கு முழுமையான உதவி வழங்கும். அதன் மூலம் அவர்கள் தங்கள் மனநலம், பிள்ளை மேம்பாடு போன்றவற்றில் நல்ல பலன்களை அடைய லாம்," என்று நேற்று முன்தினம் நம்பிக்கை தெரிவித்தார் உள்துறை, தேசிய வளர்ச்சி ஆகியவற்றின் துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம்.

4 கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையங்களில் வாகன மின்னூட்டு வசதிகள்

கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையங்களை நிர் வகிக்கும் 'செவ்ரோன் சிங்கப்பூர்' நிறுவனம், 'சிங்கப்பூர் பவர்' (எஸ்பி) நிறுவனத் துடன் இணைந்து வாகன மின்னூட்டு வசதிகளை ஏற்படுத்தவுள்ளது.

ஷெல் நிறுவனம் 20 மாதங்களுக்கு முன் தனது பெட்ரோல் நிலையங்களில் வாகன மின்னூட்டு வசதிகளை ஏற்படுத்தியது.

அதன் பிறகு தீவின் வடக்கில் சொங் பாங், கிழக்கில் சாங்கி, மேற்கில் ஜூரோங் ஸ்பிரிங், மத்திய பகுதியில் டன்னர்ன் ஆகிய தனது நான்கு நிலையங்களில் மின்னூட்டு வசதிகளை ஏற்படுத்தப் போவதாக கால்டெக்ஸ் கூறிள்ளது.

சாங்கி நிலையத்தில் இரண்டு மின்னூட்டுக் கூடங்கள் இருக்கும். அங்கு ஒரு வாகனத்துக்கு 100 கிலோவாட் மின்சாரம் ஏற்ற முடியும். மற்ற மூன்று நிலையங்களில்

50 கிலோவாட் மின்சாரத்தை ஏற்றக்கூடிய மின்னூட்டுக் கூடங்கள் அமைக்கப்படும். அதன் மூலம் ஒரு வாகனத் துக்கு 30 நிமிடங்களில் மின்னூட்டம் செய்துவிடலாம்.

கால்டெக்ஸ் நிலையங்களில் ஒரு கிலோவாட் மின்சாரத் துக்கு 46.63 காசு கட்டணம் வசூலிக்கப்படும். ஷெல் நிலை யத்தில் அதே அளவுக்கு 55 காசு வசூலிக்கப்படுகிறது.

செவ்ரோன் சிங்கப்பூர் நிறுவனமும் சிங்கப்பூர் பவர் நிறுவனமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், பெட்ரோல் நிலையங்களில் மின்னூட்டு கூடங்களுக்காக வரவேற்பு, பயன்படுத்தும் நடைமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் பிறகு இன்னும் பல கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையங்களில் அதிகமான மின்னூட்டுக் கூடங்களை ஏற்படுத்துவது பற்றி பரிசீலிப்போம் என்றும் தெரிவித்தன.

கால்டெக்ஸ் நிலையங்களில் மின்னூட்டுக் கூடங்கள் இவ்வாண்டு பிற்பாதியில் அமைக்கப்படும் என்றும் அருகில் உள்ள மின்னூட்டு வசதிகள் எங்குள்ளன போன்ற தகவல்கள் எஸ்பி நிறுவனத்தின் திறன்பேசிச் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.