அமெரிக்கா, சீனா இரண்டும் பதற்றத்தை தணிக்க வேண்டும்

அமெரிக்கா, சீனா இரண்டும் பதற்றத்தை தணிக்க வேண்டும்

3 mins read
b0dee2aa-f24a-429b-a8c8-84d5b39dd3fa
-

ஒத்துழைப்புக்கான ஏற்பாட்டை காணவேண்டும் என்றும் துணைப் பிரதமர் வலியுறுத்து

அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் ஆதிக்­கப் போட்­டா­போட்­டி­யில் ஈடு­பட்­டா­லும் அவை பதற்­றங்­க­ளைத் தணிக்க வழி காண­வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வலி­யு­றுத்­தி­னார்.

அதோடு, அவை இரண்­டும் ஒத்­து­ழைப்­புக்­கான ஏற்­பாடு ஒன்­றை­யும் உரு­வாக்­க­ வேண்­டும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

'கொவிட்-19க்குப் பிந்­தைய உல­கில் ஆசியா இன்­னும் வலு­வாக தலை எடுக்­குமா' என்ற தலைப்­பில் 'கிரெ­டிட் சுவிஸ் ஆசிய முத­லீட்டு' கூட்டம் நேற்று நடந்­தது.

அதில் பேசிய நிதி அமைச்­ச­ரு­மான திரு ஹெங், அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான நிலையான உறவு உல­கின் பொது நலன்­க­ளுக்கு முக்­கியம் என்­றார்.

அமெ­ரிக்­கா­வுக்­குப் பொறுப்பு ஏற்­றுள்ள அதி­பர் பைடன், இரு நாட்டு உற­வில் கணிக்­கத்­தக்க அணுகுமுறை­யைக் கடைப்­பி­டிப்­பார் என்­றா­லும் அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் ஆதிக்­கப்­ போட்­டி­யா­ளர்­க­ளா­கவே தொடர்ந்து இருந்­து­வ­ரும் என்று தெரி­வித்த துணைப் பிர­த­மர், இருந்­தா­லும் தாங்­கள் சேர்ந்து செயல்­ப­டு­வ­தற்­கான துறை­கள் இருப்­பதை அந்த இரு தரப்­பு­களும் ஒப்­புக்­கொண்டு இருப்­பது மகிழ்ச்சி­யாக உள்­ளது என்­றார்.

அமெ­ரிக்­கா­வின் அலாஸ்கா வில் இரு நாட்டு அதி­கா­ரி­களும் முதல்­த­ட­வை­யாக சில நாட்களுக்கு முன் நேரே சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யது சரி­யான திசை­யில் இடம்­பெ­றும் ஒன்று என்று துணைப் பிர­த­மர் கூறி­னார்.

கொவிட்-19, பரு­வ­நிலை மாற்றம் போன்ற பொது­வான சவால்­களைச் சமா­ளிக்க ஒத்­து­ழைப்­பது அந்த இரண்டு நாடு­க­ளுக்­குமே நன்மை பயக்­கும் என்­றும் திரு ஹெங் கூறி­னார். அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் இந்த வட்­டா­ரத்­தில் ஆக்­க­க­ர­மான முறை­யில் தொடர்ந்து தங்­களை ஈடு­படுத்­திக்கொள்ள வேண்­டி­ய­தும் முக்­கி­ய­மானது என்­றார் அவர்.

இரண்­டா­வது உல­கப் போருக்­குப் பிறகு மிக­வும் தேவையான நிலைத்தன்மையைச் சாதிக்க அமெ­ரிக்கா இந்த வட்­டா­ரத்­தில் இருந்து உதவி வந்­தி­ருக்­கிறது.

இந்த வட்­டா­ரத்­தின் வேக­மான வளர்ச்­சிக்கு அமெ­ரிக்­கா­வின் முத­லீடுகள் மிக­வும் உதவி இருக்­கின்றன என்­றும் திரு ஹெங் கூறி­னார். இந்த வட்­டா­ரத்­தில் தொடர்ந்து கடப்­பா­டு­டன் பங்­கா­ளித்­துவ உறவைப் பலப்­ப­டுத்­தப் போவ­தாக அமெ­ரிக்க அதி­ப­ரின் நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளதை திரு ஹெங் வர­வேற்­றார்.

ஆசி­யான் அமைப்பு அமெ­ரிக்கா­வின் முக்­கி­ய­மான பங்­காளி அமைப்­பா­கத் திகழ்­கிறது என்­பதை அவர் சுட்­டி­னார். அதே நேரத்­தில், சீனா­வின் பொரு­ளி­யல் வெற்றி இந்த வட்­டார வளர்ச்­சிக்கு வரப்­பி­ர­சா­த­மாக இருந்து வந்­துள்­ள­தா­க­வும் திரு ஹெங் தெரிவித்தார்.

ஆகை­யா­ல் ஆசி­யா­வில் அமைதி­யும் நிலைப்­பா­டும் வளர்ச்­சி­யும் தொடர்ந்து இருந்து வர வேண்­டும் என்­றால், அமெ­ரிக்கா-சீனா இரு நாடு­களும் இந்த வட்­டா­ரத்­தில் ஆக்­க­க­ர­மான முறை­யில் தொடர்ந்து தங்­களை ஈடு­ப­டுத்­திக்­கொண்டு வர­வேண்­டும் என்று திரு ஹெங் வலி­யு­றுத்­தி­னார்.

அமெ­ரிக்கா, சீனா ஆகிய இரு நாடு­களோடு மட்­டு­மின்றி எல்லா தரப்பு­களோ­டும் தென்­கி­ழக்கு ஆசியா தொடர்ந்து செயல்­பட்டு வர­வேண்­டும் என்­றும் துணைப் பிரதமர் கூறி­னார்.

தென்­கி­ழக்கு ஆசியா மேலும் முத­லீ­டு­களைக் கவர வேண்­டும் என்று தெரி­வித்த திரு ஹெங், முத­லீ­டு­க­ளுக்­கான நுழை­வா­யி­லாக சேவை­யாற்­று­வ­தன் மூலம் சிங்­கப்­பூர் இந்த வட்­டா­ரத்­தின் பங்­கா­ளி­யா­கத் திகழ முடி­யும் என்­றார்.

அதோடு மட்­டு­மின்றி, புத்­தாக்­கத்­திற்­கான உந்து தள­மா­க­வும் சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்க உதவு­கின்ற பசுமை மைய­மா­க­வும் சிங்­கப்­பூர் திகழ முடி­யும் என்­றார் அவர்.

திரு ஹெங் நேற்­றுக் கலந்­து­கொண்ட ஐந்து நாள் மெய்­நி­கர் கூட்­டத்­தில் ஆசி­யப் பசி­ஃபிக் பகு­தி­யைச் சேர்ந்த அர­சி­யல், பொரு­ளி­யல், நிதி, கல்­வித் துறை பிர­முகர்­கள் கலந்­து­கொள்­கி­றார்­கள். அந்­தக் கூட்­டம் வெள்­ளிக்­கி­ழமை முடி­வ­டை­கிறது.