உலக சமரச அமைப்புக்கு தலைமை நீதிபதி நியமனம்
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், சமரசத் தீர்வு சேவைகளுக்கான அனைத்துலக வர்த்தகச் சபை நிர்வாக அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அந்த நிர்வாக அமைப்பு, அனைத்துலக வர்த்தகச் சபையின் மேலாண்மை சபைக் குழுவாகும், அது, அனைத்துலக வர்த்தகச் சபையும் சமரசத் தீர்வு சேவை களும் நம்பத்தகுந்தவையாக, காலத்துக்குப் பொருத்த மானவையாக இருப்பதை உறுதிப்படுத்த உதவும்.
அதன் புதிய உறுப்பினராக இரண்டு ஆண்டு காலத்திற்கு திரு மேனன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதனிடையே, ஆசியாவில் பயனீட்டாளர்களுக்குச் சமரசத் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு வழிகளைப் புதிய உறுப்பினர்கள் அதிகப்படுத்துவார்கள் என்று அனைத்துலக வர்த்தகச் சபை நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
பயனீட்டாளர்களின் தேவைகள், கொவிட்-19 சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சேவைகள் மின்னிலக்கமயமாகவும் புதிய உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
இதனிடையே, அனைத்துலக வர்த்தகச் சபையின் அனைத்துலக சமரச நீதிமன்றத்தின் தலைவர் அலெக்ஸ் மோர்ரி, புதிய உறுப்பினர்களை வரவேற்றார்.
"சமரசத் தீர்வு சேவைத்தொழில் துறையில் மிகவும் பிரபலமானவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்று இருக்கிறார்கள். இது அனைத்துலக சமரச நீதிமன்றத் திற்குப் பெருமையாக இருக்கிறது,'' என்றார் அவர். கெப்பல் இணை நிறுவனத்திற்கு US$100 மில்லியன் கடன் வசதி
கெப்பல் நிறுவனத்தின் இணை நிறுவனமான 'ஃபுளோட்டல்' நிறுவனம், திரும்பத்திரும்ப பயன்படுத்திக் கொள்ளத்தக்க US$100 மில்லியன் கடன் வசதியைப் பெற்றுள்ளது.
தெமாசெக் நிறுவனம் ஒன்றிடமிருந்து அதற்கு இந்த உதவி கிடைத்துள்ளது. இணக்கப் பட்டுவாடாவின் ஒரு பகுதியாக இந்தக் கடன் வசதி கிடைக்கிறது.
கப்பல் சேவை நிறுவனமான ஃபுளோட்டல், பிரச்சினைகளில் சிக்கி இருக்கிறது. தொடக்க உடன்பாட்டின்படி இந்த நிறுவனம் தன்னுடைய சொந்த துணை நிறுவனங்கள் அனைத்திற்கும் உரிமையாளராக தொடர்ந்து இருந்து வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்பிட்டலேண்ட் பெரிய அளவில் சீரமைக்கப்படுகிறது
கேப்பிட்டலேண்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிய அளவிலான உத்தேச சீரமைப்பு பற்றி அறிவித்துள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தின் நிலச்சொத்து மேம்பாட்டுத் தொழில் தனியார்மயமாகும்.
புதிய முதலீட்டு அமைப்பு உருவாகும். கேப்பிட்ட லேண்ட் குழுமத்தின் முதலீட்டு நிர்வாகமும் நிதி நிர்வாக ஏற்பாடுகளும் தங்கு விடுதித் தொழிலும் ஒருங்கிணைக்கப்பட்டு 'கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மண்ட் மேனேஜ்மண்ட்' (சிஎல்ஐஎம்) என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். அது சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
அந்தப் புதிய அமைப்பின் கீழ் $115 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் நிர்வகிக்கப்படும் என்பதால் அந்த அமைப்பே ஆசியாவில் ஆகப்பெரிய நிலச்சொத்து முதலீட்டு நிர்வாக நிறுவனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, உலக அளவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் இத்தகைய நிறுவனங்களில் மூன்றாவது ஆகப் பெரியதாகவும் அது இருக்கும்.
சிங்கப்பூரின் ஆகப்பெரிய சொத்து மேம்பாட்டு நிறுவனம் நேற்று இந்தச் சீரமைப்புகள் பற்றி அறிவித்தது.
உத்தேச பெரிய அளவிலான சீரமைப்பின்படி, அந்தக் குழுமத்தின் நிலச்சொத்து மேம்பாட்டுத் தொழில் 'சிஎல்ஏ ரியல் எஸ்டேட் ஹோல்டிங்ஸ்' தனியார் உடைமையின் கீழ் வைக்கப்படும். உத்தேச சீரமைப்பின்படி, கேப்பிட்ட லேண்டில் உள்ள பங்குகளைக் கொண்டுள்ள தகுதி உள்ள பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு சிஎல்ஐஎம் பங்கு கொடுக்கப்படும்.
கேப்பிட்டலேண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லீ சீ கூன், புதிய சிஎல்ஐஎம் நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

