தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீண்டநாள் உறவை மேலும் வலுப்படுத்த இலக்கு

2 mins read
cc859cb3-532e-445d-845d-b85f7572d2b9
-

அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் புருணைக்கு அதிகாரத்துவப் பயணம்

வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ரு­‌ஷ்­ணன் நேற்று புரு­ணைக்கு அதி­கா­ரத்­துவ பய­ணம் மேற்­கொண்­டார். இரு நாடு­க­ளுக்­கும் இடையே உள்ள வலு­வான, நீண்­ட­நாள் உறவை மேலும் வலுப்­படுத்­தும் வித­மாக அவ­ரது இந்­தப் பய­ணம் அமைந்­தது.

புருணை மன்­னர் ஹச­னல் போல்­கி­யாவை டாக்­டர் பால­கி­ரு­‌ஷ்­ணன் சந்­தித்­துப் பேசு­வார் என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

புருணை வெளி­யு­றவு இரண்­டாம் அமைச்­சர் எரி­வான் பெஹின் யூசோஃப் அளிக்­கும் சிறப்பு விருந்­து­ப­ச­ரிப்­பி­லும் டாக்­டர் பால­கி­ரு­‌ஷ்­ணன் கலந்­து­கொண்­டார்.

இந்­தப் பய­ணத்­தின் நோக்­கத்­தைப் பற்றி சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு விவ­ரிக்­க­வில்லை. எனி­னும், தற்­போது மியன்­மார் நில­வ­ரம் பற்றி கலந்­தா­லோ­சிக்க தென்­கிழக்­கா­சிய நாடு­க­ளின் தலை­வர்­க­ளைச் சந்­திக்­கக் கோரி இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ கடந்த வாரம் அழைப்பு விடுத்­து இ­ருந்­தார்.

ஆசி­யான் எனப்­படும் தென்கிழக்கா­சிய நாடு­க­ளின் கூட்­ட­மைப்­புக்­குத் தற்­போது தலைமை வகிக்­கிறது புருணை.

அமைச்­சர் பால­கி­ரு­‌ஷ்­ண­னு­டன் சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு அதி­கா­ரி­களும் இந்­தப் பய­ணத்­தில் உட­னி­ருந்­த­னர். புருணை பய­ணத்­திற்­குப் பிறகு மலே­சி­யா­வுக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் டாக்­டர் பால­கி­ரு‌ஷ்ணன் பய­ணம் மேற்­கொள்­கிறார்.

இன்­றும் நாளை­யும் டாக்­டர் பால­கி­ரு­‌ஷ்­ண­னின் மலே­சி­யப் பய­ணத்­தின்­போது மலே­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ஹி‌‌‌ஷா­மு­தின் உசேன் அவ­ரைச் சந்­தித்து உப­ச­ரிப்­பார் என மலே­சிய வெளி­யு­றவு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான உறவை மேலும் வலுப்­ப­டுத்­தும் முயற்­சி­களில் ஓர் அங்­க­மாக டாக்­டர் பால­கி­ரு­‌ஷ்­ண­னின் மலே­சி­யப் பய­ணம் அமை­யும் என்று அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யிலான பொது­வான விவ­கா­ரங்­களைப் பற்றி இரு­நாட்டு கூட்­டு­றவின் அடிப்­ப­டை­யில் திரு ஹி‌‌‌ஷா­மு­தினும் டாக்­டர் பால­கி­ரு­‌ஷ்­ண­னும் கலந்­து­ரை­யா­டு­வர். அது­போக வட்­டார, அனைத்­து­லக விவ­கா­ரங்­கள் குறித்­தும் அவர்­கள் பேசு­வார்­கள்.

மலே­சிய பிர­த­மர் முகை­தீன் யாசின், அனைத்­து­லக வர்த்­தக, தொழில் மூத்த அமைச்­சர் அஸ்­மின் அலி, தற்­காப்பு மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், அறி­வி­யல், தொழில்­நுட்ப, புத்­தாக்க துறை அமைச்­சர் கைரி ஜமா­லு­தின் ஆகிய அமைச்­சர்­க­ளை­யும் டாக்­டர் பால­கி­ரு­‌ஷ்­ணன் சந்­தித்­துப் பேசு­வார்.

"சுகா­தார அமைச்­சின் பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்­கும் தேசிய பாது­காப்பு மன்­றத்­தின் செயல்­முறை­க­ளுக்­கும் உட்­பட்ட முறை­யில் இந்­தச் சந்­திப்­பு­கள் நடை­பெ­றும்," என்­றும் அறிக்கை தெரி­வித்­தது.