கொவிட்-19 நிவாரண நிதி: ஏமாற்று வேலை செய்த ஆடவருக்கு ஆறு மாதச் சிறை

தமது வேலை நிலை குறித்து அதி­கா­ரி­க­ளி­டம் பொய்­யு­ரைத்து கொவிட்-19 நிவா­ரண நிதி­யைப் பெற்ற ஆட­வ­ருக்கு நேற்று ஆறு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சை ஏமாற்றி $500 பெற்­றுக்­கொண்ட முகம்­மது ஃபைசல் காலித், 37, (படம்) இரண்­டா­வது முறை வேறொரு மானி­யத்­திற்கு விண்­ணப்­பித்­த­போது இவ­ரது ஏமாற்று வேலை வெளிச்­சத்­திற்கு வந்­தது. மோசடி புரிந்­த­தாக ஒரு குற்­றச்­சாட்­டை­யும் மோசடி புரிய முயற்சியில் ஈடுபட்ட மற்­றொரு குற்­றச்­சாட்­டை­யும் இவர் நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

ஃபைசலுக்கு நேற்று தண்­டனை விதித்து பேசிய மாவட்ட நீதி­பதி ஜஸ்­வீந்­தர் கோர், கொவிட்-19 நிவா­ர­ணத் திட்­டங்­களை ஃபைசலை போல மற்­ற­வர்­களும் தவ­று­த­லாக பயன்­ப­டுத்­து­வ­தைத் தடுக்க எச்­ச­ரிக்கை விடுக்க வேண்­டி­யுள்­ள­தா­கக் கூறி­னார்.

நிர்­வா­கப் பணி­யா­ளர் வேலை­யி­லி­ருந்து 2019 செப்­டம்­ப­ரில் ஃபைசல் தாமாக வில­கி­ய­தாக அர­சாங்க தரப்பு துணை வழக்­க­றி­ஞர் நிக்­க­லஸ் லிம் தெரி­வித்­தார். தாம் குற்­றங்­கள் புரிந்த சம­யத்­தில் ஃபைசல் வேலை­யின்றி இருந்­தார்.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில் 'தற்­கா­லிக நிவா­ரண நிதி'க்கு விண்­ணப்­பித்த ஃபைசல், கொவிட்-19 சூழல் கார­ண­மாக தமது வேலையை இழந்­து­விட்­ட­தாக பொய்­யு­ரைத்­தார்.

தாம் முன்­ன­தாக பணி­பு­ரிந்த நிறு­வ­னத்­தின் பெயரை நகல் செய்து தாம் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­தாக போலி கடி­தம் ஒன்றைத் தயார்­செய்ததுடன் அந்த நிறு­வனத்­தின் இயக்­கு­நர்­க­ளின் மின்­னி­லக்­கக் கையொப்­பங்­களையும் ஃபைசல் நகல் செய்­தார்.

இவ­ரது விண்­ணப்­பம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தைத் தொடர்ந்து இவ­ருக்கு $500 வழங்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மே மாதம் கொவிட்-19 ஆத­ரவு மானி­யத்­திற்கு ஃபைசல் விண்­ணப்­பித்­தார். இந்த முறை­யும் விண்­ணப்­பத்­தில் பொய்­யு­ரைத்த இவர், மூன்று மாதங்­களுக்கு மேலாக தாம் சம்­ப­ள­மில்லா கட்­டாய விடுப்­பில் சென்­ற­தா­கக் கூறி­னார்.

அர­சாங்­கத்­தி­டம் இருந்து உதவித்­தொ­கை­யைப் பெற தமது விண்­ணப்­பங்­களில் ஃபைசல் பணி­பு­ரிந்த முன்­னாள் நிறு­வ­னத்­தின் பெய­ரை­யும் மின்­னி­லக்க கையொப்­பங்­களை­யும் இவர் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தாக அந்நி­று­வ­னத்­தின் இயக்­கு­நர் போலி­சி­டம் புகார் அளித்­த­தைத் தொடர்ந்து ஃபைசலின் ஏமாற்று வேலை கண்­ட­றி­யப்­பட்­டது.

கொவிட்-19 ஆத­ரவு மானி­யத்­திற்­கான ஃபைசலின் விண்­ணப்­பத்­தைப் பரி­சீ­லனை செய்த சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு அதி­கா­ரி­கள், ஃபைசல் சமர்ப்­பித்து இ­ருந்த ஆவ­ணங்­களில் மோசடி செய்திருப்­ப­தைக் கண்­ட­றிந்து இவரது விண்­ணப்­பத்தை நிரா­க­ரித்­த­னர். ஃபைசலின் விண்­ணப்­பம் ஏற்­கப்­பட்­டி­ருந்­தால், சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு இவ­ருக்கு $2,400 வழங்­கி­யி­ருக்­கும்.

கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் தற்­கா­லிக நிவா­ரண நிதி­யி­லி­ருந்து தாம் பெற்­றுக்­கொண்ட $500ஐ அதி­கா­ரி­க­ளி­டம் ஃபைசல் திருப்­பித் தந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!