நீண்ட வரிசைகள் உருவாவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, முன்பதிவின்றி கடப்பிதழைப் புதுப்பிக்க வருவோரின் விண்ணப்பங்களை ஏற்பதை சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகம் நிறுத்திவைத்துள்ளது.
இத்திடீர் அறிவிப்பால் நேற்று காலை 400க்கும் மேற்பட்டவர்களால் தங்களின் கடப்பிதழ்களைப் புதுப்பிக்க முடியாமல் போனது.
இவர்களில் சிலர் நள்ளிரவு முதல் வரிசையில் நிற்கத் தொடங்கியதாக ஷின் மின் செய்தித்தாள் தெரிவித்திருந்தது. முன்பதிவு செய்யாமல் ஒரு நாளில் 30 பேர் மட்டுமே தங்களின் கடப்பிதழைப் புதுப்பிக்க நேரடியாக தூதரகத்திற்கு வர அனுமதி அளிக்கப்பட்டதாக கடந்த வாரம் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், இனி முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

