கொவிட்-19 தொடர்பில் பொய்ச் செய்திகள்: ஏராளமான பதிவுகளை அகற்றிய ஃபேஸ்புக், டுவிட்டர்

கொவிட்-19 தொடர்பில் பொய்ச் செய்திகள்: ஏராளமான பதிவுகளை அகற்றிய ஃபேஸ்புக், டுவிட்டர்

1 mins read
14ed2064-fd7f-4a05-a978-a034fee4c530
இரு நிறுவனங்களும் கிருமித்தொற்று குறித்த நம்பகமான தகவல்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19ஐ சுற்றி வலம் வரும் தவறான தகவல்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு சமூக ஊடகங்களான டுவிட்டர், ஃபேஸ் புக் நிறுவனங்கள் தங்களுடைய தளத்திலிருந்து மில்லியன் கணக்கான போலிச் செய்திகளை அகற்றி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு மூலம் தெரிய வருகிறது.

இரு நிறுவனங்களும் கிருமித்தொற்று குறித்த நம்பகமான தகவல்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தடுப்பூசியை போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்துவது, உலக முழுவதும் தடுப்பூசி பரவலாக விநியோகிப்பது ஆகியவற்றில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

ஏறக்குறைய 22,400 டுவிட்டர் பதிவுகள் அகற்றப்பட்டதாகவும் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் 11.7 மில்லியன் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் டுவிட்டர் பேச்சாளர் ஒருவர் மார்ச் 18ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சந்தேகத்துக்குரிய கணக்கு களின் உரிமையாளர்கள் தங்களுடைய கைத்தொைலபேசி அல்லது மின்னஞ்சல் வழி அவற்றை மறுஉறுதிப்படுத்த வேண்டும். அதன் பிறகே கணக்குகளை தொடர்ந்து பயன்படுத்த டுவிட்டர் நிர்வாகம் அனுமதியளிக்கும்.

இதற்கிடையே ஃபேஸ்புக் நிறுவனமும் கடந்த பிப்ரவரியிலிருந்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் தளங்களிலிருந்து இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட உள்ளடக்கப் பதிவுகளை அகற்றியுள்ளது. அவை அனைத்தும் கொவிட்-19 பற்றிய பொய்ச் செய்திகளாகும்.

உலக சுகாதார நிறுவனத்துடன் சேர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் பொய்ச் ெசய்திகளின் பட்டியலைத் தயாரித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்