கனமழையால் திடீர் வெள்ளம்

கனமழையால் திடீர் வெள்ளம்

1 mins read
533a096e-91ca-48d9-83a8-dd3fae5ca9fa
பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் துரித செயல்பாட்டுக் குழுஅனுப்பப்பட்டது. படம்: பொதுப் பயனீட்டுக் கழகம் ஃபேஸ்புக் -

சிங்­கப்­பூ­ரின் மேற்­குப் பகு­தி­களில் நேற்று பிற்­ப­கல் பெய்த கன­ம­ழை­யால் அப்­ப­கு­தி­யில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. இத­னால் அங்கு உள்ள சாலை­கள் சில­வற்­றில் வாக­னங்­கள் செல்ல முடி­யாத அள­வுக்கு மழை­நீர் தேங்­கி­யது.

பூன்லே வே, கார்ப்­ப­ரே­ஷன் சாலை, எண்­டர்­பி­ரைஸ் சாலை ஆகிய இடங்­களில் நேற்று மாலை 5.30 மணி­ய­ள­வில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­ட­தாக பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தது.

வாக­ன­மோட்­டி­க­ளுக்கு உதவ அதன் ஊழி­யர்­கள் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு விரைந்­த­தாக கழ­கம் கூறி­யது.

வெள்­ளம் கார­ண­மாக பேருந்­துச் சேவை எண் 252 எண்­டர்­பிரைஸ் சாலை­யி­லி­ருந்து வேறு பாதைக்குத் திருப்பி­வி­டப்­பட்­ட­தாக எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் நேற்று மாலை 5.40 மணிக்கு அதன் டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டது.

இத­னால் ஒன்­பது பேருந்து நிறுத்­தங்­களில் அந்த பேருந்து நிற்­க­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் பல இடங்­களில் நேற்று மாலை 4.15 மணிக்­கும் 4.45 மணிக்­கும் இடையே இடி­யுடன் கூடிய கன­மழை பெய்­யக்­கூ­டும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் மாலை 4 மணி­ய­ள­வில் டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருந்­தது.

மாலை 6 மணி­ய­ள­வில் வெள்­ள­நீர் பெரும்­பா­லும் வடிந்­து­விட்­டது. என்­றா­லும், இன்று பிற்­ப­கல் பல இடங்­களில் மழை பெய்­யக்­கூ­டும் என்று வாரி­யம் முன்­னு­ரைத்­துள்­ளது.