தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சான்: புதுத் திறன் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது 'கெப்பல் கார்ப்பரேஷன்'

1 mins read
60a093ed-b98c-4881-858b-1b93bad144a0
-

சிறிதோ, பெரிதோ அனைத்து நிறு­வ­னங்­களும் புதுத் திறன்­களை வளர்த்­துக்­கொண்டு கொவிட்-19 சூழ­லால் உரு­வா­கிய சவால்­களை எதிர்­கொள்ள புதுப்­புது சந்­தை­களை நாட வேண்­டும் என்­றார் வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங்.

இதற்கு 'கெப்­பல் கார்ப்­ப­ரே­ஷன்' ஒரு நல்ல எடுத்­துக்­காட்டு என்­றும் அவர் குறிப்­பிட்­டார். ஹார்­பர்­ஃப­ரண்ட் அவென்­யூ­வில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­தின் தலை­மை­ய­கத்­திற்கு நேற்று சென்­றி­ருந்த திரு சான், நீடித்து நிலைக்­கத்­தக்க எரி­சக்­தித் தீர்­வு­கள், இணைப்­பாற்­றல், நகர்ப்­பு­றத் தீர்­வு­கள் போன்ற புதிய வளர்ச்சி அம்­சங்­களில் கெப்­பல் கவ­னம் செலுத்­த­வுள்­ள­தைச் சுட்­டி­னார்.

"இன்று நாம் பார்க்­கும் கெப்­பல், 10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இருந்த கெப்­ப­லி­லி­ருந்து மாறு­பட்­டது," என்­றும் தெரி­வித்­தார்.

சந்தை மேம்­பா­டு­கள், தொழில்­நுட்ப மாற்­றங்­கள் ஆகி­ய­வற்­று­டன் ஈடு­கொ­டுக்­கும் கெப்­பல் நிறு­வனத்­தைப் போல் செயல்­ப­டு­மாறு மற்ற நிறு­வ­னங்­களுக்கு அமைச்­சர் அறி­வு­றுத்­தி­னார்.