தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் முதன்முதலாக ரயில் துறை தரநிலைகள்

2 mins read
ce4b0f46-f3c5-4356-8983-2c80206bd926
-

பொறியாளர்கள், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி கூட்டணி

சிங்­கப்­பூ­ரின் முதல் ரயில் தர­நி­லை­களை உரு­வாக்­கும் திட்­டத்தை சிங்­கப்­பூர் ரயில் துறை தொடங்­கி­ உள்­ளது. தவ­றான தக­வல்­கள் சென்­ற­டை­யும் சாத்­தி­யத்­தைக் குறைத்து அனைத்து பங்­கா­ளி­களும் இணக்­கம் காண்­ப­தற்கு இத்­த­ரங்­கள் வழி­வ­குக்­கும்.

முதல் மூன்று அம்­சங்­களை ஒட்டி பொறி­யா­ளர்­கள், எஸ்­பி­எஸ் டிரான்­சிட், எஸ்­எம்­ஆர்டி ஆகிய தரப்­பு­கள் இணைந்து உரு­வாக்­கிய இத்­த­ரங்­களை நேற்று ஷங்­ரிலா ஹோட்­ட­லில் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தொடக்கி வைத்­தார்.

ரயில்­கள் செல்­லும் பாதை­க­ளுக்­கு­ரிய துறைச் சொற்­கள், சொற்­சுருக்­கங்­கள் ஆகி­யவை ஓர் அம்­ச­மா­கும். இப்­பா­தை­கள் எவ்­வாறு பரா­ம­ரிக்­கப்­ப­டு­கின்­றன, ரயில் சொத்­து­கள் நிர்­வா­கத்­திற்­குத் தொடர்­பான மேற்­கோள் குறிப்­பு­கள் ஆகி­யவை எஞ்­சிய இரு அம்­சங்­களா­கும்.

ரயில்­பாதை கட்­ட­மைப்­பு­க­ளுக்­கான தொழில்­நுட்ப ஆலோ­ச­னைக் குழு ஒன்று சென்ற ஆண்டு அமைக்­கப்­பட்­டது. அதன் கீழ் இயங்­கும் 17 பணிக்­கு­ழுக்­கள், தரங்­களை உரு­வாக்­கு­வ­தில் செயல்­பட்டு வரு­கின்­றன. எஸ்­பி­எஸ் டிரான்­சிட், எஸ்­எம்­ஆர்டி ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த கல்­வி­யா­ளர்­கள், பொறி­யாளர்­கள், பிர­தி­நி­தி­கள் ஆகி­யோர் இப்­ப­ணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக திரு ஓங் குறிப்­பிட்­டார்.

துறை­சார்ந்த முயற்­சி­யான இதில் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் ஒரு சிறிய பங்­காற்­றி­யுள்­ள­தாக குறிப்­பிட்ட அமைச்­சர், அது மதிப்­பு­மிக்­கது என்­றார்.

ரயில் செயல்­பா­டு­கள் நீக்­குப்­போக்­குத்­தன்மை அதி­கம் இல்­லாத வண்­ணம், தரங்­கள் அமைந்­திட வேண்­டும் என்று அவர் சுட்­டி­னார்.

இவ்­வாறு தரங்­களை வகுப்­ப­தால் மூன்று வழி­களில் ரயில் துறை பல­ன­டை­யும் என்­றார் தொழில்­நுட்ப ஆலோ­ச­னைக் குழு­வின் இணைத் தலை­வ­ரும் பொறி­யா­ளர் கழ­கத் தலை­வ­ரு­மான டாக்­டர் ரிச்­சர்ட் குவோக்.

மேலும் சீராக இயங்­கும் தன்­மையை ரயில் துறை பெறும். ரயில் துறை­யில் பணி­யாற்­று­வோ­ரி­டம் எதிர்­பார்ப்­பு­கள் என்ன என்­ப­தைத் தெளி­வா­கத் தெரி­விப்­ப­தால் அவர்­களி­டம் போட்­டித்­தன்மை அதி­கரிக்­கும். தொடர்ந்து முன்­னேற்­றம் காண­வேண்­டும் என்ற கலா­சா­ரம் ஊக்­கு­விக்­கப்­படும்.

"இந்த தரம் பிற்­கா­லத்­தில், வட்­டார, அனைத்­து­லக ரயில் துறைக்கு அள­வீ­டு­க­ளாக திக­ழும். இத­னால் அனைத்­து­லக ரயில் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் சிங்­கப்­பூ­ரின் தலை­மைத்­து­வம் மேலும் வலுப்­பெ­றும்," என்­றார் அவர்.

திட்­டத்தை மேலும் சிறப்­பிக்க, நினை­வுப்­புத்­த­கம் ஒன்று வெளி­யிடப்­பட்­டது. நூலை பொறி­யா­ளர் கழ­கம், சிங்­கப்­பூர் தர மேம்­பாட்டு அமைப்பு, எஸ்­எம்­ஆர்டி ஆகி­யவை இணைந்து வெளி­யிட்­டன.

"இன்று நாம் கண்­டுள்ள முன்­னேற்­றம், நிலப் போக்­கு­வ­ரத்­தின் மற்ற பிரி­வு­க­ளி­லும் தர மேம்­பா­டு­கள் உரு­வா­வ­தற்கு வழி­கோ­லும்," என்­றார் டாக்­டர் குவோக்.

இதை­ய­டுத்து சொத்து நிர்­வாகம், பரா­ம­ரிப்பு, பாது­காப்பு, சேவை ஆகிய அம்­சங்­க­ளுக்­கும் தரங்­கள் உரு­வாக்­கப்­படும்.