என்யுஎஸ் விடுதி கழிவு நீரில் 'கொவிட்-19' கிருமித் தடயங்கள்

என்யுஎஸ் விடுதி கழிவு நீரில் 'கொவிட்-19' கிருமித் தடயங்கள்

2 mins read
4dd5e936-959a-4561-8d28-1140139c7798
கொவிட்-19 சோதனைக்குச் சென்ற மாணவர்களில் சிலர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக (என்யுஎஸ்) விடுதி ஒன்றி­லி­ருந்து வெளி­யே­றும் கழிவு நீரில் தொற்று ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மரபணு மூலக்கூறு (கொவிட்-19 ஆர்­என்ஏ) தடயங்கள் காணப்­பட்­ட­தால் அங்கு தங்­கி­யுள்ள மாண­வர்­களுக்கு அதிரடியாக கொவிட்19 சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இதற்­காக நேற்று சிறப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டன.

மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கைத் தொலைபேசி, அடையாள அட்டை, மாணவர் அட்டை ஆகியவற்றுடன் வரிசையில் நின்று சோதனை செய்து கொண்டனர்.

'யுட­வுன்' என்று அழைக்­கப்­படும் நார்த் டவர் இன் யூனி­வர்­சிட்டி டவு­னில் 13 வீடு­களில் உள்ள மாண­வர்­களுக்கு சோதனை நடத்தப் பட்டதாக என்யுஎஸ் தெரிவித்தது.

கொவிட்-19 சோதனை முடி­வு­கள் தெரி­யும் வரை­ வீட்­டில் தங்­கி­ இ­ருக்க வேண்­டும் என்று மாணவர்களுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. மாண­வர்­க­ளின் வீடு­கள் உள்ள இடத்தை சுற்றி தடுப்­பு­கள் போடப்­பட்­டுள்­ளன.

சுகா­தார அமைச்­சின் வழி­காட்டு­த­லின்­படி பாதிக்­கப்­பட்ட மாண­வர்­கள் அனை­வ­ரும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக 'பிசி­ஆர்' சோத­னையை செய்து கொள்­வது அவ­சி­யம் என்று என்யு­எஸ் அனுப்­பிய சுற்­ற­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இரண்டு மூன்று நாட்­களில் சோதனை முடிவு தெரியவரும். அந்த முடி­வைப் பொருத்து அடுத்த நடவடிக்கை குறித்து தெரி­விக்­கப்­படும். அதுவரை மாணவர்கள் இணை­யம் வழி­யாக வகுப்­பறைப் பாடங்­களில் பங்­கேற்­கலாம்.

குளி­யல் அறையைப் பயன்­ப­டுத்து­வது, துணி­களைச் சல­வைக்­குப் போடு­வது, உண­வு­க­ளைத் தரு­விப்­பது போன்ற அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்­கை­க­ளுக்கு மட்­டுமே மாண­வர்­கள் அறை­யை­விட்டு வெளியே செல்ல முடியும்.

என்­யு­எஸ் இணை­யத் தளம் வழி­யாக நாளுக்கு இரண்டு முறை தங்­க­ளு­டைய உடல் வெப்­ப ­நிலையை மாணவர்கள் பதிவு செய்ய வேண்­டும். வெளிஆட்­களைச் சந்திக்க அனு­மதி கிடை­யாது என்று என்யு எஸ் குறிப்பிட்டது.

நார்த் டவ­ரில் தங்­கி­யுள்ள பெரும்­பா­லா­னோர் ெவளி­நாட்டு மாண­வர்­கள். அவர்­கள் முது­நி­லைப் பட்­டம் படித்து வரு­கின்­ற­னர்.

சனிக்­கி­ழமை காலை 11.00 மணிக்­கும் மாலை 5.00 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் சேக­ரிக்­கப்­பட்ட கழிவு நீர் மாதி­ரி­யில் ஆற்­றல் குறைந்த 'கொவிட்-19 ஆர்­என்ஏ' தடயங்கள் இருந்­ததை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

இதையடுத்து மாணவர்களுக்கு அவசர சுற்றறிக்கையை என்யுஎஸ் அனுப்பியது.