புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் பயனீட்டாளர் விலைக் குறியீடு

இவ்­வாண்­டில் முதல்முறை­யாக பய­னீட்­டா­ளர் விலைக் குறி­யீடு புதிய நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் முதல்முறை­யாக சாத­க­மான சூழ்நிலைக்கு மாறி­யுள்­ளதை விலைக் குறியீடு காட்டுகிறது.

சேவைத்துறை­யில் மட்­டும் சிறி­த­ளவு சரிவு ஏற்­பட்­டுள்­ளது. கார் விலை­கள் மற்­றும் வீட்டு வாட­கை­யிலும் சரிவு காணப்­ப­டு­கிறது.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­படை­யில் கடந்த மாதம் அனைத்­துப் பொருட்­க­ளின் பண­வீக்­கம் 0.2 விழுக்­கா­டாக இருந்­தது. இதற்கு முந்­தைய மாதத்­தில் இது பூஜ்­யம் ஆக இருந்­தது. கடந்த பிப்­ர­வரி மாதத்­திற்­குப் பிறகு பண­வீக்­கம் முதல்முறையாக பூஜ்­யத்­தி­லி­ருந்து அதி­க­ரித்தது. இதற்­கி­டையே தங்­கு­மி­டம், தனி­யார் சாலைப் போக்­கு­வ­ரத்து செல­வி­னம் ஆகி­ய­வற்றை தவிர்த்த மூலதார பண­வீக்­கம் கடந்த ஜனவரியில் பூஜ்­யத்­துக்­குக் கீழ் 0.2 விழுக்­கா­டாக இருந்­தது. இது, கடந்த டிசம்­ப­ரில் -0.3 விழுக்­கா­டாக இருந்­தது என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் மற்­றும் வர்த்­தக, தொழில் அமைச்­சின் அறிக்கை தெரிவி­த்தது.

முக்­கிய பண­வீக்­கம் சரிந்­து­வந்த நிலை­யில் கடந்த மாதம் மித­ம­டைந்­தது. பயனீட்டாளர் விலை­யில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிர­தான பண­வீக்­கம் பிரதி­ப­லிக்­கிறது.

நாணய கொள்­கையை பரி­சீ­லிப் ­ப­தற்­காக இந்த அள­வீட்டை சிங்கப்பூர் நாணய ஆணையம் தொடர்ந்து அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கிறது.

கடந்த மாதம் தனி­யார் போக்­கு ­வ­ரத்து செல­வி­னம் 4.2 விழுக்­காடு உயர்­வைப் பதிவு செய்­தது. இது, ஜனவரியில் 1.9 விழுக்­காட்­டி­லி­ருந்து அதி­க­ரித்­துள்­ளது.

கார் விலை­கள் கூடி­ய­தும் பெட்­ரோல் விலை­யில் ஏற்­பட்ட சிறிய சரி­வும் இதற்கு கார­ண­மா­கும்.

சேவைக் கட்­ட­ணங்­களும் அதி கரித்துள்ளன. 0.5 விழுக்காட்டை எட்டி பின்னர் 0.3 விழுக்காட்டுக்கு இது குறைந்தது.

பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் சுவாசக் கோளாறு தொடர்பான சிகிச்சைக்கு அரசாங்கம் கழிவுகளை அறிவித்து இருந்ததை அமைச்சும் ஆணையமும் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்தக் கழிவுகள், இவ்வாண்டு பிப்வரவரியில் வெளிநோயாளி சிகிச்சை பணவீக்கத்தில் சிறிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி யிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!