கொவிட்-19 தொடர்பில் பொய்ச் செய்திகள்; ஏராளமான பதிவுகளை அகற்றிய ஃபேஸ்புக், டுவிட்டர்

கொவிட்-19ஐ சுற்றி வலம் வரும் தவ­றான தக­வல்­களைத் தடுத்து நிறுத்­தும் நோக்­கத்­தோடு சமூக ஊடகங்­க­ளான டுவிட்­டர், ஃபேஸ் புக் நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய தளத்­தி­லி­ருந்து மில்­லி­யன் கணக்­கான போலிச் செய்­தி­களை அகற்றி வரு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு மூலம் தெரிய வரு­கிறது.

இரு நிறு­வ­னங்­களும் கிரு­மித்­தொற்று குறித்த நம்­ப­க­மான தக­வல்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கும் நட­வ­டிக்­கை­க­ளை­ எடுத்து வரு­கின்­றன.

தடுப்­பூ­சியை போட்­டுக் கொள்வதை ஊக்­கப்­ப­டுத்­து­வது, உலக முழு­வ­தும் தடுப்­பூசி பர­வ­லாக விநி­யோ­கிப்­பது ஆகி­ய­வற்­றில் நிறு­வ­னங்­கள் கவ­னம் செலுத்தி வரு­கின்­றன.

ஏறக்­கு­றைய 22,400 டுவிட்­கள் அகற்­றப்­பட்­ட­தா­க­வும் சர்ச்­சைக்­கு­ரிய உள்­ள­டக்­கங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் 11.7 மில்­லி­யன் கணக்­கு­ கள் சரி பார்க்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் டுவிட்­டர் பேச்­சா­ளர் ஒரு­வர் மார்ச் 18ஆம் தேதி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு அளித்த பேட்­டி­யில் கூறி­னார்.

சந்­தே­கத்­துக்­கு­ரிய கணக்­கு ­களின் உரி­மை­யா­ளர்­கள் தங்­க­ளு­டைய கைத்­தொை­ல­பேசி அல்­லது மின்னஞ்­சல் வழி மறு­வு­று­திப்­படுத்த வேண்­டும்.

அதன் பிறகே கணக்­கு­களைத் தொடர்ந்து பயன்­ப­டுத்த டுவிட்­டர் நிர்­வா­கம் அனு­மதிய­ளிக்­கும்.

இதற்­கி­டையே ஃபேஸ்புக் நிறு­வ­ன­மும் கடந்த பிப்­ர­வ­ரி­யி­லி­ருந்து ஃபேஸ்புக் மற்­றும் இன்ஸ்­டா­கி­ராம் தளங்­க­ளி­லி­ருந்து இரண்டு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட உள்­ள­டக்­கப் பதி­வு­களை அகற்­றி­யுள்­ளது.

அவை அனைத்­தும் கொவிட்-19 பற்­றிய பொய்ச் செய்­தி­க­ளா­கும்.

உலக சுகா­தார நிறு­வ­னத்­து­டன் சேர்ந்து ஃபேஸ்புக் நிறு­வ­னம் பொய்ச் ெசய்­தி­க­ளின் பட்­டி­ய­லைத் தயா­ரித்­தி­ருந்­தது.

ஆரம்­பத்­தில் கிரு­மித் தொற்­றின் தீவி­ரம், அந்த நோய் பர­வும் விதம், பிளீச் (Bleach) நீரைக் குடித்­தால் நோய் குண­மா­கும் என்ற உத்­த­ர­வா­தம் போன்ற பொய்ச் செய்­தி­கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

தற்­போது கிரு­மித் தொற்று மற்­றும் தடுப்­பூ­சி­கள் பற்றி போலி­யான பதி­வு­கள் வெளிவரு­கின்­றன. தடுப்­பூ­சி­க­ளுக்கு நோயை எதிர்க்­கும் ஆற்­றல் இல்லை, தடுப்­பூ­சிக­­ளுக்­குப் பதி­லாக நோய் வரு­வதே மேல், தடுப்­பூ­சி­கள் நச்­சுத்­தன்மை வாய்ந்­தவை, ஆபத்­தா­னவை போன்ற பொய்ச் செய்­தி­கள் சமூக ஊடங்­களில் பரப்­பி­வி­டப்­ப­டு­கின்­றன.

டுவிட்­ட­ரும் தடுப்­பூசி பற்­றிய போலி­யான செய்­தி­களை அகற்­றும் நடவடிக்கைகளை விரி­வு­ப­டுத்­தி­உள்­ளது.

கொவிட்-19 பற்­றிய தவ­றான செய்­தி­கள், போலித் தக­வல்­கள் ஆகி­யவை உடனே அகற்­றப்­படும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸ் நாளேட்டிடம் பேசிய அதிகாரபூர்வ டுவிட்­டர் பேச்­சா­ளர் தெரிவித்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!