சிங்கப்பூரில் ஆகப்பெரிய மிதக்கும் சூரியசக்தித் தகடு

சிங்கப்பூரில் ஆகப்பெரிய மிதக்கும் சூரியசக்தித் தகடு

1 mins read
3f1f5781-3f9e-4dee-bb61-0eeac1a8fe84
சிங்கப்பூரில் கடலில் மிதக்கும் ஆகப்பெரிய சூரிய சக்தித் தகடு அமைக்கப் பட்டுள்ளது.இது, ஏழு காற்பந்துத் திடல்களுக்கு ஈடாகும்.படம்: சன்சீப் குழுமம் -

சிங்­கப்­பூ­ரில் ஆகப்­பெ­ரிய மிதக்கும் சூரி­ய­சக்தித் தகடு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இது, உல­கி­லேயே ஆகப்­பெ­ரிய அள­வில் அமைக்­கப்­பட்­டுள்ள சூரி­ய­சக்தித் தக­டு­களில் ஒன்று என்று கரு­தப்­ப­டு­கிறது.

இந்­தச் சூரி­ய­சக்தி தகடு ஆண்­டுக்கு 4,000 டன் கரிம வெளி­யேற்­றத்தைக் குறைக்க உத­வும்.

ஜோகூர் நீரி­ணை­யில் உட்லண்ட்சுக்கு அருகே கடல் நீரில் இதனை உருவாக்க ஒரு வருட காலம் பிடித்­தது என்று நீடித்த நிலைத்­தன்மை எரி­சக்தியை வழங்கி வரும் சன்­சீப் குழு­மம் அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

கொவிட்-19 முடக்­கப்­பட்ட சூழ்­நி­லை­யில் இந்­தக் கட்டு­மா­னம் வெற்­றி­க­ர­மாக முடிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்த நிறு­வ­னம் தெரி­வித்­தது.

மொத்­தம் 13,312 சூரி­யசக்தித் தக­டு­கள் இதில் இணைக்­கப்­பட்­டுள்­ளன. நாற்பது மாறு­திசை மின்­னோட்ட சாத­னங்­கள், 30,000க்கும் மேற்­பட்ட மித­வை­கள் பயன்­ப­டுத்தப்­ பட்­டுள்­ளன. இதன் அளவு, ஏழு காற்­பந்துத் திடல்­க­ளுக்கு ஈடா­னது.

ஆண்­டுக்கு ஆறு மில்­லி­யன் கிலோ­வாட் மணி­நேர எரி­சக்­தியை இது உற்­பத்தி செய்­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நிலப்­பற்­றாக்­குறை நில­வும் சிங்­கப்­பூ­ரில் இத்­த­கைய மிதக்­கும் சூரி­ய சக்தித் தகடு வெற்­றி­க­ர­மாக அமைக்­கப்­பட்­டுள்­ளது, எதிர்­கா­லத்­தி­ல் சிங்­கப்­பூரிலும் இவ்­வட்­டா­ரத்­திலும் இதேபோன்ற பல திட்­டங்­களை மேற்­கொள்ள வழி வகுத்­து உள்­ளது.