கேப்பிட்டலேண்ட் பங்கு விலைகள் ஏற்றம்

கேப்பிட்டலேண்ட் பங்கு விலைகள் ஏற்றம்

1 mins read
cdc551d9-db8d-490e-a188-2152aa307482
-

கேப்­பிட்­ட­லேண்ட் பங்­கு­கள் நேற்று வர்த்­த­கம் தொடங்­கிய முதல் நிமி­டத்­தி­லேயே 21 விழுக்­காடு வரை ஏற்­றம்கண்­டன.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அந்த நிறு­வ­னத்­தின் பங்குப் பரி­வர்த்­தனை 3.31 வெள்­ளி­யில் முடி ­வடைந்­தது.

திங்­கட்­கி­ழமை நிறு­வ­னத்­தின் பங்கு வர்த்­த­கம் நிறுத்தி வைக்கப்­ பட்டது.

மறு­நா­ளான நேற்று வர்த்­த­கம் தொடங்­கி­ய­தும் 10.02 மணி­ய­ள­வில் கேப்­பிட்­ட­லேண்ட் பங்­கு ­களின் விலை 3.80 வெள்­ளிக்கு பரி­வர்த்­தனை செய்­யப்­பட்­டது.

இது, ஏறக்­கு­றைய 14.8 விழுக்­காடு அதா­வது 49 காசு உயர்­வா­கும்.

சுமார் 46.5 மில்­லி­யன் பங்­கு­கள் அப்­போது கைமா­றின.

சென்ற திங்­கட்­கி­ழமை பெரிய அள­வில் சீர்­தி­ருத்­தத்தை கேப்­பிட்­ட­லேண்ட் அறி­வித்­த­தைத் தொடர்ந்து பங்கு விலை­கள் அதி கரித்தன.

சீர்­தி­ருத்­தத்­தின் ஒரு பகுதியாக கேப்­பிட்­ட­லேண்ட் குழு­மம் இரண்டு நிறு­வ­னங்­க­ளாக பிரிக்­கப்­படும். சொத்து மேம்­பாட்டு நிறு­வ­னம், தனி­யார் உரி­மை­யா­ள­ரின் கீழ் வரும்.

முத­லீட்டு நிறு­வ­ன­மும் தங்­கு­மிட நிறு­வ­னமும் ஒரே நிறு­வ­ன­மாக இணைக்­கப்­பட்டு கேப்­பிட்­ட­லேண்ட் இன்­வெஸ்ட்­மெண்ட் மேனஜ்­மெண்ட் (சிஎல்­ஐ­எம்) என்று அழைக்­கப்­படும்.

கேப்­பிட்­ட­லேண்ட் பங்­கு­தா­ரர்­கள், சிஎல்­ஐ­எம்­மின் பங்­கு­தா­ரர்­க­ளாக ஆவார்­கள்.

இந்த நிறு­வ­னம் சிங்­கப்­பூர் பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிடப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.